ஐ.பி.எல் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.


இந்நிலையில் லீக் போட்டிகள் நடைபெறும் கடைசி நாளான, இன்று முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் நிறுத்துவைக்கப்பட்டது.


வாய்ப்பை பெற்ற ஆர்.சி.பி:


முன்னதாக இந்த சீசனில் ஆரம்பத்தில் மிகவும் மோசமாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த போட்டிக்களில் சிறப்பாக விளையாடியது. முதல் அணியாக இந்த சீசனை விட்டு பெங்களூரு அணி வெளியேறிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பெற்றது. 


அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலியின் பங்கும் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. விராட் கோலி அதிக பந்துகளை எடுத்துக்கொண்டு குறைவான ரன்களை அடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கடுத்து நடைபெற்ற போட்டிகளில் எல்லாம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விராட் கோலி.


கோலிக்கு அழைப்பு:


இந்த நிலையில் விராட் கோலியை பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடுமாறு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அழைப்பு விடுத்திருக்கிறார்.  இதுகுறித்து ஷாகித் அப்ரிடி பேசுகையில், “விராட் கோலி மாதிரியான ஒரு வீரரின் அறிக்கை, அவர்கள் தங்கள் நாட்டின் தூதர்கள் என அறிவிக்கிறது. அவரிடம் இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை நான் எதிர்பார்த்தேன்.


மிக்க நன்றி விராட்! நீங்கள் பாகிஸ்தான் வந்து பிஎஸ்எல் தொடரில் விளையாட வேண்டும் இல்லை இந்திய அணி உடன் வந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும். நீங்கள் வருவதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்


மேலும் படிக்க:Rohith Sharma: எல்லாம் முடிந்தது..மும்பை அணியில் இருந்து விலகல்? ரோஹித் ஷர்மா சூசகம்!