ஐபிஎல் சீசன் 18:


ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. முன்னதாக மெகா ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில், வீரர்களை தக்கவைப்பது, வீரர்களை மாற்றுவது என பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் என்பதால் எந்தெந்த வீரர்களை அணி தக்கவைக்கும் யாரை கழட்டி விடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அணிகள் தங்களது பயிற்சியாளர்களையும் மாற்றி வருகிறது.


அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. 


கேகேஆரில் இணையும் குமார் சங்கக்காரா:


லக்னோ அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு 2022 கவுதம் காம்பீர் செயல்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசன் 17-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது அணியின் ஆலோசகராக கம்பீரை நியமித்தது. கொல்கத்தா அணி தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காத வகையில் அந்த அணியை சாம்பியன் பட்டத்தை வெல்ல வைத்தார். இதனைத்தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்த விலகிய கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனார். 


இச்சூழலில் தான் கொல்கத்தா அணியின் அடுத்த ஆலோசகர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதால் ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த சங்கக்காரா எந்த அணிக்கு செல்வார் என்ற கேள்வியும் எழுந்தது.






இந்த நிலையில் தான் குமார் சங்கக்கரா கவுதம் கம்பீர் இருந்த இடத்தை பிடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கம்பீரின் இடத்தை குமார் சங்கக்காராவிற்கு கொல்கத்தா அணி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க: T20 Lowest Score: அய்யோ பாவம்..10 ரன்னில் ஆல் அவுட்!டி20 வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா


மேலும் படிக்க: Cristiano Ronaldo:900 கோல்.. "தி கோட்"என நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை