சிங்கப்பூர் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தொடங்கிய மங்கோலிய அணி டி20 போட்டிகள் வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது.

டி20 வரலாற்றில் மோசமான சாதனை:

ஆசிய குவாலிஃபையர் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்டம்பர் 5) நடைபெற்ற போட்டியில் மங்கோலியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய மங்கோலிய அணி டி20 போட்டிகள் வரலாற்றிலேயே ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது.

அதாவது முதலில் பேட்டிங் செய்த மங்கோலிய அணி 10 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மங்கோலிய அணி வீரர்களான மோகன் விவேகானந்தன் , தவாசுரேன் ஜாமியன்சுரேன் , துமுர்சுக் துர்முங்க் , டெமுலென் அமர்மென்ட் , டோர் போல்ட் உள்ளிட்ட வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவட் ஆனார்கள். 2024 ஆம் ஆண்டு மட்டும் மங்கோலிய அணி டி20 போட்டிகளில் குறைந்த ரன்களை எடுப்பது இது மூன்றாவது முறை.

இதனைத்தொடர்ந்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிங்கப்பூர் அணி வெறும் 5 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மங்கோலிய அணி தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் மோசமான தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. 

மிரட்டிய ஹர்ஷா பரத்வாஜ்:

சிங்கப்பூர் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஹர்ஷா பரத்வாஜ் மங்கோலிய வீரர்களை தன் பந்து வீச்சால் மிரட்டினார். மொத்தம் 4 ஓவர்கள் வீசினார். இதில் 2 ஓவர்களை மெய்டன் செய்தார். அதேபோல், 3 ரன்கள் மட்டுமோ மொத்தமாக விட்டுக்கொடுத்தார். விக்கெட்டுகளை பொறுத்தவரை 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அக்ஷய் பூரி 2 விக்கெட்டுகளையும், ராகுல் ஷேஷாத்ரி 1 விக்கெட்டையும், ரமேஷ் காளிமுத்து 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

டி20யில் குறைந்த ஸ்கோர்:

மங்கோலியா 10 ரன்கள் எதிரணி , சிங்கப்பூர் 2024
ஐல் ஆஃப் மேன் 10 ஸ்பெயின் 2023
சிட்னி தண்டர் 15 அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 2022
துருக்கி 21 செக் குடியரசு 2019
சீனா 23 மலேசியா 2023
லெசோதோ 26 உகாண்டா 2021
சீனா 26 தாய்லாந்து 2023
துருக்கி 28 லக்சம்பர்க் 2019
திரிபுரா 30 ஜார்கண்ட் 2009
தாய்லாந்து 30 மலேசியா 2022

டி20யில் குறைந்த ஸ்கோர்: இந்தியன் டி20 லீக்

அணிகள் ரன்கள் எதிரணி ஆண்டு
பெங்களூர் 49 கொல்கத்தா 2017
ராஜஸ்தான் 58 பெங்களூர் 2009
ராஜஸ்தான் 59 பெங்களூர் 2023
டெல்லி 66 மும்பை 2017
டெல்லி 67 பஞ்சாப் 2017

மேலும் படிக்க: Rahul Dravid: RR அணியின் பயிற்சியாளர்.. ராகுல் டிராவிட் எனும் பெரும்சுவர்! புதிய பொறுப்பில் வெல்வாரா?

 

மேலும் படிக்க: Australia vs Scotland 1st T20: டி20.. பவர் ப்ளேவில் மாஸ் காட்டிய டிராவிஸ் ஹெட்.. புதிய சாதனை படைத்தார்