கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை:


கால்பந்து விளையாட்டை தெரிந்தவர்களுக்கு நிச்சயம் கிரிஸ்டியானோ ரொனால்டோவை தெரிந்திருக்கும். சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளில் இவர் செய்யாத சாதனைகளே இல்லை என்ற அளவிற்கு அத்தனை சாதனைகளையும் செய்திருக்கிறார். மிகச்சிறிய நாடான போர்ச்சுகலில் பிறந்து இருந்தாலும் உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகிய சமூகவலைதளங்களிலும் ரொனால்டோ தான் அதிக பின் தொடர்பாவர்களை கொண்டவராக இருக்கிறார்.






அண்மையில் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய ரொனால்டோ கால்பந்து போட்டிகளில் நான் இப்போது 899 கோல்கள் அடித்துள்ளேன். கண்டிப்பாக 1000 கோல்களை அடிப்பேன். 900 கோல் என்ற சாதனையை படைப்பதற்கு எனக்கு இன்னும் ஒரு கோல் மட்டும் தான் இருக்கிறது. அந்த சாதனையை விரைவில் செய்வேன் என்று கூறி இருந்தார்.


900 கோல்கள் அடித்த ரொனால்டோ:


இந்த நிலையில் தான் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில்தான் இவர் இந்த சாதனை படைத்தார்.






இச்சூழலில் 900 கோல்கள் அடித்தது குறித்து வெற்றிக்குப் பிறகு பேசிய அவர்,"இது நான் நீண்ட காலமாக அடைய விரும்பிய ஒரு மைல்கல். நான் இந்த எண்ணிக்கையை அடைவேன் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் தொடர்ந்து விளையாடும்போது, ​​அது இயல்பாக நடக்கும். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன்"என்று கூறியுள்ளார். 


 




மேலும் சமூகவலைதளத்தில் 900 கோல்கள் அடித்தது குறித்த பதிவு ஒன்றையும் ரொனால்டோ வெளியிட்டுள்ளார். அதில்,இதற்குத்தான் நான் கனவு கண்டேன். எனக்கு இன்னும் கனவுகள் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் ரொனால்டோ. 900 கோல்கள் அடித்த ரொனால்டோவை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: Rahul Dravid: RR அணியின் பயிற்சியாளர்.. ராகுல் டிராவிட் எனும் பெரும்சுவர்! புதிய பொறுப்பில் வெல்வாரா?


 


மேலும் படிக்க: Australia vs Scotland 1st T20: டி20.. பவர் ப்ளேவில் மாஸ் காட்டிய டிராவிஸ் ஹெட்.. புதிய சாதனை படைத்தார்