குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த போட்டி மூலம் ஒட்டுமொத்த ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ரிங்குசிங். நெருக்கடியான நேரத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்தபோது கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டபோது 5 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி மாபெரும் வெற்றியை கொல்கத்தா அணிக்கு அளித்தார் ரிங்குசிங். இதன்மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார்.
ஆபாச பட நடிகை பாராட்டு:
கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களை மட்டுமின்றி பிரபல ஆபாச பட நடிகையின் மனதையும் ரிங்குசிங் வென்றுள்ளார் என்பது ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி. பிரபல ஆபாச நடிகை கேந்திரா லஸ்ட். இவருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று ரிங்குசிங் அடித்து ஆடியதை பாராட்டியுள்ள கேந்திரா லஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிங்குசிங்குடன் தனது புகைப்படத்தையும் இணைத்து பின்னால் கொல்கத்தா அணியின் லோகோவையும் சேர்த்து எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு ரிங்கு தி கிங் என்று பாராட்டியுள்ளார்.
கேந்த்ரா லஸ்ட் தீவிர ஷாரூக்கான் ரசிகை என்று தெரியவருகிறது. ஏனெ்னறால், நேற்று முன்தினம் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷாரூக்கான் தற்போது நடித்து வரும் ஜவான் படத்தின் அப்டேட் குறித்து கேட்டுள்ளார். இதற்காக ஷாரூக்கான் ஒருபுறமும், மறுபுறம் நயன்தாராவின் புகைப்படத்தையும் பகிர்ந்து நடுவில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரே ஓவரில் 5 சிக்ஸர்:
குஜராத் அணி நேற்று முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 204 ரன்களை எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடினார். அவர் 83 ரன்களை எடுத்த நிலையில் அவுட்டான நிலையில், 155 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.
குஜராத் கேப்டன் ரஷீத்கான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி குஜராத்தின் வெற்றியை உறுதி செய்திருந்த நிலையில், கடைசி ஓவரை வீசிய யஷ்தயால் வீசிய ஓவரில் வெற்றிக்கு 6 பந்தில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் உமேஷ்யாதவ் தட்டிவிட்டுச் சென்ற நிலையில், கடைசி 5 பந்துகளில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. அனைவரும் வெற்றி குஜராத்திற்கே என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து 5 பந்துகளையும் சிக்ஸர் விளாசி குஜராத்தின் வெற்றியை பறித்து கொல்கத்தாவிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IPL 2023: ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்.. ஐபிஎல்லில் பறக்கவிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள்.. முழு பட்டியல் இங்கே..!
மேலும் படிக்க: IPL records: ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரிக்கொடுத்த வீரர்கள்.. முழு பட்டியல் இதோ..