ஐபிஎல் போட்டியில் நேற்றைய 13வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா நேற்றைய போட்டியில் விளையாடாத சூழ்நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக ரஷித் கான் களமிறங்கினார். 


முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 63 ரன்களும், சாய் சுதர்சன் 53 ரன்களும் குவித்திருந்தனர். 


அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயருடன் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா கைகோர்த்தார். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.  20வது ஓவரின் கடைசி ஐந்து பந்துகளை எதிர் கொண்ட அவர் 28 ரன்கள் அடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் உமேஷ் யாதவ். அடுத்த ஐந்து பந்துகளை எதிர் கொண்ட அவர் முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். அடுத்த பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என இருந்தபோது, சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிபெற செய்தார். 


இந்தநிலையில்,  ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த நான்கு வீரர்களை இங்கே பார்ப்போம்.


1. கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) vs பந்து வீச்சாளர் – ராகுல் சர்மா (2012)


ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் கிறிஸ் கெய்ல். கடந்த 2012ம் ஆண்டு ஆபார பார்மில் இருந்த கிறிஸ் கெய்ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ருத்ரதாண்டம் ஆடி 175 ரன்கள் குவித்தார். 


2012 ஐபிஎல் சீசனின் 21வது போட்டியில் புனே வாரியர்ஸ் வீரர் ராகுல் சர்மா வீசிய பதின்மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் சவுரப் திவாரி ஒரு ரன் எடுத்தார். அதன்பிறகு ஸ்ட்ரைக் வந்த கிறிஸ் கெயில் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விரட்டினார். இதன்மூலம் அந்த ஓவரில் மட்டும் ராகுல் சர்மா 31 ரன்களை விட்டுகொடுத்தார். 


2) ராகுல் தெவாடியா (ஆர்ஆர்) vs பந்து வீச்சாளர் - ஷெல்டன் காட்ரெல் (2020)


ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் ராகுல் தெவாடியாவும் ஒருவர். 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த சீசனின்போது, ​​தெவாடியா 31 ரன்களில் 53 ரன்களை விளாசி 224 ரன் இலக்கை ராஜஸ்தான் அணி வெற்றிபெற உதவினார்.


ராஜஸ்தான் அணிக்கு 18 பந்துகளில் 51 ரன்கள் தேவையாக இருந்தது. ஷெல்டன் காட்ரெல் வீசிய 18வது ஓவரில் ராகுல் தெவாடியா தொடர்ந்து 5 சிக்ஸர்களை பதிவு செய்தார். 


3. ரவீந்திர ஜடேஜா (சிஎஸ்கே) vs பந்து வீச்சாளர் - ஹர்ஷல் படேல் (2021)


கடந்த 2021ம் ஆண்டு ஹர்ஷல் பட்டேல் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இருந்தார். 2021 ஐபிஎல் போட்டியில் படேலுக்கு எதிராக ஜடேஜா அதிரடியாக பேட்டிங் செய்தார். ஜடேஜா ஹர்ஷல் படேல் 6, 6, 6 (NB), 6, 2, 6, 4 6 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 


4) ரிங்கு சிங் (கேகேஆர்)  vs பந்து வீச்சாளர் – யாஷ் தயாள் (2023)


ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் ரிங்கு சிங் . குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் கொல்கத்தா அணிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து 30 ரன்கள் திரட்டி கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.