ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


ஐபிஎல்:


பேட்ஸ்மேன்கள் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களுக்கு விருந்தளிப்பதை நோக்கமாக கொண்டதே ஐபிஎல் தொடர். அதன் உச்சகட்டமாக ஒரு ஓவரிலேயே ஒரு பந்துவீச்சாளரின் மொத்த கேரியரையே முழுமையாக முடித்துவிடும் அளவிலான சம்பவங்கள் கூட நடைபெறுவது உண்டு. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரிலேயே அதிகபட்ச ரன்களை கொடுத்து, மோசமான சாதனை படைத்த வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம்.  


 


05. ரவி பொபாரா - பஞ்சாப்


2010ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய ரவி பொபாரா, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 33 ரன்களை வாரிக்கொடுத்தார். அந்த போட்டியில் கெயில் மற்றும் மனோஜ் திவாரி சேர்ந்து 27 ரன்களை சேர்க்க, எக்ஸ்ட்ராக்களாக பொபாரா 6 ரன்களை வழங்கினார்.


04. பர்விந்தர் அவானா - பஞ்சாப்


2014ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவானா, சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 33 ரன்களை வாரிக்கொடுத்தார். அந்த ஓவரில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட சுரேஷ் ரெய்னா 32 ரன்களை விளாச, ஒரு ரன் எக்ஸ்ட்ராவக கிடைத்தது.


03. டேனியல் சாம்ஸ் - மும்பை:


கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய டேனியல் சாம்ஸ், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரிக்கொடுத்தார். அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட பாட் கம்மின்ஸ் 34 ரன்களை விளாச, ஒரு ரன் எக்ஸ்ட்ராவக கிடைத்தது.


02.  ஹர்ஷல் படேல் - பெங்களூரு


கடந்த 2021ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேல், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 37 ரன்களை வாரிக்கொடுத்தார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் உட்பட ரவீந்திர ஜடேஜா 36 ரன்களை விளாச, ஒரு ரன் மட்டும் எக்ஸ்ட்ராவக கிடைத்தது.


 


01. பரமேஸ்வரன் - கொச்சி டஸ்கர்ஸ்


கடந்த 2011ம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய பரமேஷ்வரன், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 37 ரன்களை வாரிக்கொடுத்தார். அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட கிறிஸ் கெயில் 36 ரன்களை விளாச, ஒரு ரன் மட்டும் எக்ஸ்ட்ராவக கிடைத்தது.


30 ரன்கள் கொடுத்த வீரர்கள்:


யாஷ் தயாள் மற்றும் ராகுல் சர்மா ஆகியோர் ஒரே ஓவரில் 31 ரன்களை கொடுத்துள்ளனர். அவர்களை தொடர்ந்து த்வெயின் பிராவோ, சாம் கர்ரன், ஷெல்டன் காட்ரல் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகிய வீரர்கள் ஒரே ஒவரில் தலா 30 ரன்களை வாரிக்கொடுத்துள்ளனர்.