2021 ஐபிஎல் சீசனின் லீக் சுற்று பரபரப்பாக முடிந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவது முன்னதாகவே உறுதி செய்திருந்த நிலையில், நான்காவது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவியது. கடைசி நாள் வரை நடப்பு சாம்பியன்ஸ் அணியான மும்பை இந்தியன்ஸ்க்கு வாய்ப்பு இருந்ததால், ஒரு அசாத்தியமான இன்னிங்ஸை ஆடிவிட்டு வெற்றியோடு லீக் சுற்றை முடித்து கொண்டது மும்பை.
இன்றைய மிக முக்கியச் செய்திகள்:
‛டாக்டர்’ முதல் ஷோவில் வலிமை ‛க்லிம்ஸ்’ திரையிடல்.. ஆர்ப்பரித்த ‛தல’ ரசிகர்கள் வீடியோ!
Local Body Polls Second Phase LIVE: உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்டங்களிலும் பரபரப்பான வாக்குப்பதிவு...!
கடைசி லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பின்ன்னுக்கு தள்ளி நான்காவது இடத்தில் நிறைவு செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது மும்பை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை பதிவு செய்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன், வெறும் 32 பந்துகளில் 84 ரன்கள் அடிக்க, அவரை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 200+ எட்ட வைத்தனர். தொடரில் இருந்து வெளியேறும் முன்பு "சாவு பயத்த காட்டிட பரமா” என்பதுபோல விளையாடி முடித்தது மும்பை. ஆனால், ஹைதராபாத் அணியும் விட்டுக்கொடுக்கவில்லை டஃப் ஃபைட் தந்த ஆரஞ்ச் ஆர்மி 193 ரன்கள் எடுத்தது.
இந்த ஐபிஎல் சீசனில், முதலில் பேட்டிங் செய்து 230 ரன்களை கடந்த முதல் இன்னிங்ஸ் இதுவே. வரலாற்றில், இப்படி அதிக ஸ்கோர் எட்டிய டாப் 5 இன்னிங்ஸ்கள் பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட்.
1. 263/5 | ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு vs பூனே வாரியர்ஸ் - 2013
130 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது
2. 248/3 | ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் லையன்ஸ் - 2016
144 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது
3. 246/5 | சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 2010
23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது
4. 245/6 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - 2018
31 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது
5. 240/5 | சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - 2008
33 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது
ஐபிஎல் வரலாற்றில், பெங்களூரு அணி அதிகபட்சமாக 263 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, 220+ அடித்த டாப் 10 இடங்களில் 3 முறை பெங்களூரு அணியும், சென்னை, கொல்கத்தா அணிகள் தலா இரண்டு முறையும், பஞ்சாப், டெல்லி, மும்பை அணிகள் தலா 1 முறையும் அடித்துள்ளது.
மும்பை அணியைப் பொருத்தவரை, இதுவரை ஒரு முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்து 200+ ஸ்கோர்களை எட்டியுள்ளது. அது நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி மட்டுமே. நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லெட் ஆட்டத்தில், சென்னைக்கு எதிரான போட்டியில் 219 ரன்கள் எடுத்து சேஸ் செய்து போட்டியை வென்றது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்