Local Body Polls Second Phase LIVE: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
தற்போது நடந்து வரும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2021ன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பான அடுத்தடுத்த அப்டேட், இந்த பகுதியில் காணலாம்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 56.78 சதவீதம் வாக்குப் பதிவு
காஞ்சிபுரம் 3 மணி நிலவரப்படி 55.90 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் புதுச்சேரி கிராம வாக்குச்சாவடியில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச் சீட்டு மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்.
தமிழ்நாட்டில் நடந்து வரும் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவில், 11 மணி நிலவரப்படி 25.90 சதவீதம் வாக்குகள் பாதிவாகியுள்ளன.
என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. என் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டு காலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கி.மீ. நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன்,
நூற்றுக்கணக்கான போராட்டங்கள் 51/2 ஆண்டுகாலம் ஜெயில் வாழ்க்கை. அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.
எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக் குழு கூட்டம் முடிவு செய்யும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர் இதற்கு மன்னிப்பே கிடையாது நீதிமன்றத்தை கூட அவர்கள் மதிக்கவில்லை. என்றார் அவர்.
காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: 11 மணி நிலவரப்படி 25.28 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 ஒன்றியங்களுக்கும் இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட மொளச்சூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையத்திற்கு மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த ரஹமத் நிஷா (40) என்பவர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார்.
அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்திற்கும் நேரில் பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளதாக கூறி வாக்களிக்க அனுமதிக்காமல் ஒருமையில் பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் அழுதுகொண்டே வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்பு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பணியில் இருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.85 சதவீதம் வாக்கு பதிவு
காஞ்சிபுரம் 9 மணி நிலவரப்படி 10.51 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி13.88% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, பணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான லெப்பை குடியிருப்பு பெரிய நாயகிபுரம் A.D.H உயர்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்குக்கினை பதிவு செய்தார்.
ராதாபுரம் தொகுதி வள்ளியூர் யூனியன் சங்கனாபுரம் ஊராட்சி இந்து நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த சங்கரம்மாள் என்ற 88 வயது மூதாட்டி, சிரமப்பட்டதால் அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தூக்கி வந்து வாக்களிக்க உதவினார்
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது வாக்கை செலுத்தினார்
கடையநல்லூர் வலசை கிராமத்தில் தேர்தலை புறக்கணிக்கப்பதாக கிராம மக்கள் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து புறக்கணிப்பை வாபஸ் பெற்றனர்.
சித்தாமூர் ஒன்றியம்
1. மாவட்ட கவுன்சிலர் - 2
2.ஒன்றிய கவுன்சிலர் - 16
3.ஊராட்சி மன்ற தலைவர் - 43
4.வார்டு உறுப்பினர் - 297
வாக்குச்சாவடி மையங்கள் - 166
அச்சரப்பாக்கம் ஒன்றியம்
1.மாவட்ட கவுன்சிலர் - 2
2.ஒன்றிய கவுன்சிலர் - 18
3.ஊராட்சி மன்ற தலைவர் - 59
4.வார்டு உறுப்பினர் - 390
வாக்குச்சாவடி மையங்கள் - 204
மதுராந்தகம் ஒன்றியம்
1.மாவட்ட கவுன்சிலர் - 2
2.ஒன்றிய கவுன்சிலர் - 22
3.ஊராட்சி தலைவர் - 58
4.வார்டு உறுப்பினர் - 420
வாக்குச்சாவடி மையங்கள் - 232
ஒருங்கிணைந்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 39 ஊராட்சிகள்
1.மாவட்ட கவுன்சிலர் - 2
2.ஒன்றிய கவுன்சிலர்கள் - 24
3.ஊராட்சி மன்ற தலைவர்கள் - 39
4.வார்டு உறுப்பினர்கள் - 342
வாக்குச்சாவடி மையங்கள் - 368
காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம்-14 ஊராட்சிகள்
செட்டிபுண்ணியம் ஊரப்பாக்கம், குருவன்மெடு, கொளத்தூர், பழவேலி புலிப்பாக்கம், சிங்கபெருமாள்கோவில், ஆத்தூர்,ஆத்தூர், திம்மாவரம், வெங்கடாபுரம், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம்
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம்-10 ஊராட்சிகள்
வண்டலூர், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி, மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், பெருமட்டுநல்லூர், வெங்கடமங்கலம், காரணை புதுச்சேரி, ஊனமாஞ்சேரி.
காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியம்-15 ஊராட்சிகள்
கல்வாய், ஆலப்பாக்கம், காயரம்பேடு, திருவடிசூலம், கண்டமங்கலம், பெரிய புத்தேரி, வீராபுரம், அஞ்சூர், மேலமையூர், கருநீலம், குன்னவாக்கம் பட்றவாக்கம், தென் மேல்பாக்கம்,வள்ளம்.
சென்னையின் புறநகரில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பணியில் 5,820 பேர் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ராகுல்நாத், தேர்தல் பார்வையாளர் சம்பத் ஆகியோர் கண்காணிக்கின்றனர்.
வாக்குச் சாவடிக்கு தேவையான வாக்குப் பெட்டி, மெழுகு, வாக்குச்சீட்டுகள், அரக்கு, கயிறு, படிவங்கள் ஆகியவை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலமாகவும், வீடியோ கேமராக்கள் மூலமாகவும், நுண் பார்வையாளர்கள் மூலமாக கண்காணிக்க உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஒன்பது காவல் ஆய்வாளர்கள் 600 போலீசார், 30 மொபைல் பார்ட்டி போலீசார், ஆறு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்துார் ஆகிய ஒன்றியங்களுக்கு, இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காஞ்சிபுரத்தின் இரண்டு ஒன்றியங்களில் 880 பதவிகளுக்கு, 2,975 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். செங்கல்பட்டில் காட்டாங்கொளத்துார், மதுராந்தகம், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் 1,736 பதவிகளுக்கு 5,578 வேட்பாளர்களுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 2,616 பதவிகளுக்கு, 8,553 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.முதல் கட்டதேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.முதல் கட்டதேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியது. பெண்கள், ஆண்கள் என வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க குவிந்து வருகின்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களில் 950 வாக்குப்பதிவு மையங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்த லில் 8 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 49 பேரும், 88 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 337 பேரும், 180 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 605 பேரும், 1,308 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 4,019 பேரும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 82 பேரும், 135 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 625 பேரும், 316 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 1239 பேரும், 2337 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 7,009 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணியில் 11,411 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூர், மயிலம், மரக் காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,379 வாக்குப்பதிவு மையங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 6ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 3,14,449 ஆண் வாக்காளர்களும், 3,17,330 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம்பாலினத்தவர் உட்பட 6,31,785 பேர் வாக்களித்தனர். இதில் 83.65 சதவீத வாக்குகள் பதிவானது. இதே போல் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 1,95,322 ஆண்வாக்காளர்கள், 1,94,274 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 மூன்றாம்பாலினத்தவர் உட்பட 3,89,598பேர் வாக்களித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.25 சதவீத வாக்குகள் பதிவானது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங் களில் 11 ஒன்றியங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Background
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே ஒரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அது தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளை இங்கு காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -