ரன் மிஷின் விராட் கோலி:


இந்திய அணியின் ரன் மிஷின் என்று இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகத்தின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. சர்வதேச அளவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர். அதேபோல் சர்வதேச அளவில் 2010 ஆம் ஆண்டு டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், டெஸ்ட் போட்டியில் 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அறிமுகமானார்.


அதன்படி சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர், இந்திய அணிக்காக அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர்,ஒருநாள் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 13000 ஒருநாள் ரன்களை எட்டிய முதல் சர்வதேச வீரர், ஒரு உலகக்கோப்பையில் 700 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் விராட் கோலி தான். அதோடு, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி 20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் மற்றும் 7 ஆயிரம் ரன்களை முதலில் கடந்த வீரராகவும் விராட் கோலி தான் இருக்கிறார். அதேபோல் ஐ.பி.எல் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரராகவும் விராட் கோலி தான் இருக்கிறார்.


 


ஐ.பி.எல் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்:


அந்தவகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அறிமுகமான விராட் கோலி தற்போதுவரை அந்த அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். அதன்படி, இதுவரை 237 .பி.எல் போட்டிகளில் 229 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் இவர் 7263 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் மற்றும் 50 அரைசதங்கள் அடங்கும். அந்தவகையில் தான் விளையாடிய ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரையில் 643 பவுண்டரிகள் மற்றும் 234 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள விராட் கோலி அதிகபட்சமாக 113 ரன்களை விளாசியிருக்கிறார் கோலி


அந்த வகையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே அதிக சதங்களை விளாசியா வீரராக விராட் கோலி தான் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெய்ல் இருக்கிறார். 142 .பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 6 சதங்கள் விளாசி உள்ளார். மூன்றாவது  இடத்தில் 96 ஐ.பி.எல் போட்டிகள் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர் 5 சதங்களுடனும், கே.எல்.ராகுல்  118 போட்டிகளில் விளையாடி 4 சதங்களுடனும் நான்காவது இடத்தில், 145 போட்டிகள் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் 4 சதங்களை விளாசி ஐந்தாவது இடத்தில் உள்ளார். அதிக சதங்களை ஐ.பி.எல் தொடரில் விளாசிய டாப் 5 வீரர்களில் இரண்டு பேர் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் படிக்க: IND vs ENG 4th Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. ராஞ்சி மைதானத்தில் ரோகித் சர்மா படைக்கவிருக்கும் 10 சாதனைகள்! லிஸ்ட் இதோ!


 


மேலும் படிக்க: IND vs ENG Test: இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட்.. பிட்ச் ரிப்போர்ட் இதோ!