இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. முன்னதாக ராஞ்சி மைதானத்தில், அனைத்து வடிவ போட்டிகளிலும் 8 இன்னிங்ஸ்களில் 52.00 சராசரியுடன் விளையாடி அற்புதமான சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா. அதன்படி, 83.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 212 ரன்கள் எடுத்தார்.
ராஞ்சி டெஸ்டில் ரோகித் சர்மா படைக்கவிருக்கும் சாதனைகள்:
- இதுவரை ரோகித் சர்மா தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 3977 ரன்களை எடுத்துள்ளார். 4000 ரன்களை தொட இன்னும் 33 ரன்களை ரன்களே தேவைப்படும் சூழலில் ராஞ்சி டெஸ்டில் இந்த சாதனையை செய்வார். அந்த வகையில் 4000 ரன்களை கடந்த 17-வது இந்திய வீரர் ஆவார்.
- ஒரு கேப்டனாக 930 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ள ரோகித் சர்மா 70 ரன்களை எடுத்தால் 1000 டெஸ்ட் ரன்களை கடந்த 10வது இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெறுவார்.
- சர்வதேச அளவில் அனைத்து வகையான டெஸ்ட் போட்டிகளிலும் இதுவரை 593 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள ரோகித் சர்மாவிற்கு 600 சிக்ஸர்களை தொடுவதற்கு இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த சாதனையை செய்யும் பட்சத்தில் அனைத்து சர்வதேச வடிவங்களிலும் 600 சிக்ஸர்களை எட்டிய முதல் பேட்டர் ஆவார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 50 சிக்சர்களை எட்ட ரோகித் சர்மாவிற்க (48) இன்னும் இரண்டு சிக்ஸர்கள் தேவை. பென் ஸ்டோக்ஸுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 50 சிக்சர்களை இரண்டாவது பேட்டர் ஆவார். ஸ்டோக்ஸ் தற்போது 78 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
- முதல் தர போட்டிகளில் 8963 ரன்களை எடுத்துள்ள ரோகித் சர்மாவிற்கு 9000 முதல் தர ரன்களை முடிக்க 37 ரன்கள் தேவைபடுகிறது.
- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன் குவித்த வீரராக ஆவதற்கு இன்னும் 32 ரன்கள் தேவை படுகிறது. தற்போது டேவிட் வார்னர் 2423 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 2392 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
- இங்கிலாந்துக்கு எதிராக 1000 டெஸ்ட் ரன்களை முடிக்க ரோகித் ஷர்மாவிற்கு இன்னும் 13 ரன்கள் தேவை. 13 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்த சாதனையை எட்டிய 16 வது இந்திய வீரர் ஆவார். சுனில் கவாஸ்கருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆவார்.
- ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் 2500 டெஸ்ட் ரன்களை முடிக்க ரோகித் சர்மாவுக்கு (2450) 50 ரன்கள் தேவை.
- டேவிட் வார்னர் (49), சச்சின் டெண்டுல்கர் (45) ஆகியோருக்குப் பிறகு, கிறிஸ் கெய்லை (42) விஞ்சவும், தொடக்க ஆட்டக்காரர்களில் மூன்றாவது அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற ரோகத் சர்மா (42) சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் ஒரு சதம் தேவை.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு தொடக்க ஆட்டக்காரராக அதிக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற கிரேக் பிராத்வைட்டின் சாதனையை சமன் செய்ய ரோகித் ஷர்மாவுக்கு (14) இன்னும்ஒரு அரைசதம் தேவைபடுகிறது.
மேலும் படிக்க:IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!
மேலும் படிக்க:MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு...தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!