இந்தியா - இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
நேருக்கு நேர்:
இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 33 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்து அணி 51 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது 50 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் இங்கிலாந்து அணி 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்தியா 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. 28 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
பிட்ச் அறிக்கை:
ராஞ்சியில் உள்ள ஆடுகளம் பல இந்திய ஆடுகளங்களைப் போலவே , பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளமாக உள்ளது. இது போட்டி ஆரம்பித்த பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.
ராஞ்சி மைதானத்தில் டெஸ்ட் பதிவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்:
இந்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளர்கள் 2.61 சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மறுபுறம், சுழற்பந்து வீச்சாளர்கள் 2.82 என்ற எக்கனாமியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதுடன் மற்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்திருக்கிறது இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளின் சராசரி ஸ்கோர் 474 ஆகும் .
IND vs ENG, 4வது ஆடும் 11 வீரர்கள்:
இந்தியா:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகத் ஷர்மா (கேப்டன்), சுப்மான் கில், ரஜத் படிதார்/கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் ( விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், முகமது சிராஜ்
இங்கிலாந்து:
ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் ( விக்கெட் கீப்பர் ), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்/ஷோயிப் பஷீர்.
மேலும் படிக்க: MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு...தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!
மேலும் படிக்க: Rishabh Pant: ஐபிஎல் தொடர்... டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!