.பி.எல் தொடர்:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச் பிடித்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


அசத்திய ரெய்னா:


இந்திய அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலும், 2006 ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமான வீரர் சுரேஷ் ரெய்னா. அதன்படி, குஜராத் லயன்ஸ் அணிக்காக ஒரு வருடம் மட்டுமே ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களால் தோனி எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டாரோ அதே அளவிற்கு ரசிகர்களின் அன்பை பெற்றவர். அந்த வகையில் சுரேஷ் ரெய்னா தான் ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இதுவரை மொத்தம் 205 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 109 கேட்சுகளை பிடித்துள்ளார்.


இரண்டாவது இடத்தில் இருப்பவர் விராட் கோலி. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் இவர் 237 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 106 கேட்சுகளை பிடித்து இருக்கிறார் விராட் கோலி. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை விளையாடிய கீரன் பொல்லார்ட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அந்தவகையில், 189 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 103 கேட்சுகளை பிடித்துள்ளார்.


நான்காவது இடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா. டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விளையாடி வரும் இவர் 243 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் அதன்படி, 98 கேட்சுகள் பிடித்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா உள்ளார். அதன்படி, 226 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 97 கேட்சுகள் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!