IPL SRH vs RCB LIVE Score: பலமான ஹைதராபாத் அணியை வீழ்த்திய பெங்களூரு; 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

IPL 2024 SRH vs RCB LIVE Score Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 25 Apr 2024 11:17 PM
IPL SRH vs RCB LIVE Score: பலமான ஹைதராபாத் அணியை வீழ்த்திய பெங்களூரு; 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி தனது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. 


 

IPL SRH vs RCB LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 8வது விக்கெட்டினை இழந்த ஹைதராபாத்!

ஆட்டத்தின் 16வது ஓவரில் ஹைதரபாத் அணியின் புவனேஷ்வர்குமார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: 75 ரன்கள் தேவை!

ஹைதராபாத் அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்படுகின்றது. 15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: கம்மின்ஸ் அவுட்!

கம்மின்ஸ் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 14வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் 15 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். 

IPL SRH vs RCB LIVE Score: 100 ரன்களைக் கடந்த ஹைதராபாத்!

11 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்து இலக்கை எட்ட போராடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: 6வது விக்கெட்டினை கைப்பற்றிய பெங்களூரு - அப்துல் சமத் அவுட்!

ஆட்டத்தின் 10வது ஓவரில் அப்துல் சமத் தனது விக்கெட்டினை 10வது ஓவரில் கரண் சர்மாவிடம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 6 பந்தில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 5வது விக்கெட்டினை இழந்த ஹைதராபாத் - நிதிஷ் ரெட்டி அவுட்!

ஹைதராபாத் அணி 7.2 ஓவர்கள் முடிவில் 69 சேர்த்த நிலையில் தனது 5வது விக்கெட்டினை இழந்து தத்தளித்து வருகின்றது. நிதிஷ் ரெட்டி தனது விக்கெட்டினை கரண் சர்மா பந்தில் இழந்து வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: வெற்றிப் பாதையில் பெங்களூரு; சரிந்தது ஹைதராபாத் டாப் ஆர்டர்!

ஹைதராபாத் அணியின் க்ளாசன் தனது விக்கெட்டினை 5வது ஓவரில் இழந்து  வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: மார்க்கரம் அவுட்!

4.2 ஓவர்கள் முடிவில் மார்க்ரம் தனது விக்கெட்டினை ஸ்னப்னில் சிங் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: சூடு பிடிக்கும் ஆட்டம்; தொடக்க வீரர்களை வீழ்த்திய பெங்களூரு!

பெங்களூரு அணி சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா விக்கெட்டினை கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

IPL SRH vs RCB LIVE Score: படிதார். கோலி அரைசதம்; ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு!

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டினை இழந்து 207 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 200 ரன்களை நெருங்கும் பெங்களூரு!

பெங்களூரு அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: தினேஷ் கார்த்திக் அவுட்!

தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டினை 19வது ஓவரில் இழந்து வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: பவுலிங்கில் அரைசதம் கடந்த கம்மின்ஸ்!

3.4 ஓவர்கள் வீசிய நிலையில் பேட் கம்மின்ஸ் விக்கெட் கைப்பற்றாமல் 54 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 

IPL SRH vs RCB LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 179 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: மூன்றாவது விக்கெட்டினை அள்ளிய உனத்கட்!

ஆட்டத்தின் 17வது ஓவரில் உனத்கட் இந்த ஆட்டத்தில் தனது பவுலிங்கில் மூன்றாவது விக்கெட்டினை கைப்பற்றினார். 17வது லாம்ரோர் 4 பந்தில் 7 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: 150 ரன்களைக் கடந்த பெங்களூரு!

16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: விராட் கோலி அவுட்!

43 பந்தில் 51 ரன்கள் சேர்த்த விராட் கோலி மிதவேகப்பந்து வீச்சாளர் உனத்கட் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: விராட் கோலி அரைசதம்; நிதான ஆட்டத்தில் பெங்களூரு; நெருக்கடி கொடுக்கும் SRH!

14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: விராட் கோலி அரை சதம்!

விராட் கோலி 37 பந்தில் தனது அரைசதத்தினை எட்டி விளையாடி வருகின்றார். 

IPL SRH vs RCB LIVE Score: 13 ஓவர்கள் முடிந்தது!

13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் பிரிந்தது!

34 பந்தில் 65 ரன்கள் குவித்த விராட் கோலி மற்றும் படிதார் கூட்டணியை உனத்கட் பிரித்தார். 

IPL SRH vs RCB LIVE Score: படிதார் அவுட்!

படிதார் தனது விக்கெட்டினை உனத்கட் பந்தில் இழந்து வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: 19 பந்துகளில் அரைசதம் விளாசிய படிதார்!

பெங்களூரு அணியின் படிதார் 19 பந்தில் தனது அரைசதத்தினை எட்டி அதிரடியாக விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 121 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசிய படிதார்!

ஆட்டத்தின் 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தினை மொத்தமாக பெங்களூரு வசம் திருப்பியுள்ளார் படிதார். 

IPL SRH vs RCB LIVE Score: 100 ரன்களைக் கடந்த பெங்களூரு!

11வது ஓவரில் பெங்களூரு அணி 100 ரன்களைக் கடந்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 80 ரன்களைக் கடந்த பெங்களூரு!

9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: வில் ஜேக்ஸ் அவுட்!

வில் ஜேக்ஸ் தனது விக்கெட்டினை மார்கண்டே பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 

IPL SRH vs RCB LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 50 ரன்களை எட்டிய பெங்களூரு!

பெங்களூரு அணி 5வது ஓவரின் தனது 50 ரன்களை எட்டியுள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: 50 ரன்களை நெருங்கிய பெங்களூரு!

பெங்களூரு அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: டூ ப்ளெசிஸ் அவுட் - கெத்து காட்டிய நட்டு!

நடராஜன் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 12 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். பெங்களூரு தனது முதல் விக்கெட்டினை 48 ரன்களில் இழந்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: ரன்களை வாரிக் கொடுத்த பேட் கம்மின்ஸ்!

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 19 ரன்களை வாரிக்கொடுத்துள்ளார். மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 43 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: அட்டகாசமான சிக்ஸ்ர் விளாசிய டூ ப்ளெசிஸ்!

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் டூ ப்ளெசிஸ் சிறப்பான சிக்ஸரை விளாசி ஆட்டத்தின் சிக்ஸர் கணக்கைத் தொடங்கியுள்ளார். 

IPL SRH vs RCB LIVE Score: சீராக ரன்கள் சேர்க்கும் பெங்களூரு!

இரண்டு ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IPL SRH vs RCB LIVE Score: நிதான தொடக்கம்!

ஆட்டத்தின் முதல் ஓவரில் பெங்களூரு அணி ஒரு பவுண்டரியுடன் மொத்தம் 10 ரன்கள் சேர்த்து நிதானமாக தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: பவுண்டரியுடன் தொடங்கிய பெங்களூரு!

பெங்களூரு அணி தனது ரன் கணக்கை ஆட்டத்தின் முதல் பந்தில் பவுண்டரி விளாசி தொடங்கியுள்ளார். 

IPL SRH vs RCB LIVE Score: தொடங்கியது ஆட்டம்!

ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு அணி தனது பேட்டிங்கினைத் தொடங்கியுள்ளது. 

IPL SRH vs RCB LIVE Score: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, லாக்கி பெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள்

IPL SRH vs RCB LIVE Score: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்


 

IPL SRH vs RCB LIVE Score: வெல்லப்போவது யார்? ஹைதரபாத்தை பழிவாங்குமா விராட் கோலியின் பெங்களூரு?

டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

Background

ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான பார்மில் உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று பெங்களூரு அணி, வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். பெங்களூரு புள்ளிகள் பட்டியலில் கீழே அதாவது 10வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியுற்றால் கூட பெங்களூரு அணி பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறும். அதே நேரத்தில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 266 ரன்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்களும் எடுத்தது.


பிட்ச் ரிப்போர்ட்: 


ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அதிகளவில் கடந்த போட்டிகளில் அடித்ததை நாம் பார்த்தோம். ஏனெனில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் போல் இந்த ஸ்டேடியமும் மிக சிறியது. இங்குதான் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் குவித்தது. 


அதே நேரத்தில், போட்டியில் டாஸ் வென்ற அணி, முதலில் பந்து வீச வேண்டும். ஏனெனில் இந்த ஸ்டேடியத்தில், 40 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 32 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது.


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 24 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 13 போட்டிகளிலும், பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிவடைந்துள்ளது. 


பெங்களூரு Vs ஹைதராபாத் நேருக்கு நேர்


மொத்தப் போட்டிகள்: 24
ஐதராபாத் வெற்றி: 13
பெங்களூரு வெற்றி: 10
முடிவு இல்லை: 1 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.