TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..

TVK : மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்... ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Continues below advertisement

சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்பட்டு வரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 1300 ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒப்பந்த பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கூடியதால் சேலம் கோட்டை மைதான பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: TN RAIN: புத்தக திருவிழாவில் இப்படியா நடக்கனும்! சோகத்தில் மூழ்கிய விற்பனையாளர்கள் !

இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், இதனால் ஆர்ப்பாட்டமாக நடத்தினர். இருப்பினும் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்காக தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கொடுக்கும். எனவே தமிழக அரசு அழைத்து பேசி, நடவடிக்கை எடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று கோரிக்கையை முன் வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், தமிழக அரசு கடந்த தேர்தல் அறிக்கையில் அரசு நிறுவனங்களின் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் இதுவரை தேர்தல் வாக்குறுதிகள் கூறப்பட்டது போல எந்த அரசு நிறுவனத்திலும் ஒப்பந்த தொழிலாளர்களும் இதுவரை நிரந்தரம் பணியாளர்களாக பணி அமர்த்தப்பட வில்லை.

இதையும் படிங்க: Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் கடந்த ஒன்பது நாளாக உள்ளிருக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த சேலம் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு மேட்டூர் அணை மின் நிலையத்தில் போராடி வரும் தொழிலாளர்களுக்கு முழு ஆதரவு வழங்க உத்தரவிட்டனர். அதன்படி ஐந்து நாட்களுக்கு முன்பு மேட்டூர் அனல் மின் நிலையம் நேரில் சென்று தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். இன்று சேலம் கோட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தோம். உண்ணாவிரத போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரத போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்ற வருகிறது. தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் தமிழக வெற்றிக் கழகம் பாதிக்கப்பட்டவர்களுடன் களத்தில் நிற்கும் என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola