RCB vs SRH LIVE Score: மீண்டும் தோற்ற பெங்களூரு; 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி!
IPL 2024 RCB vs SRH LIVE Score Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 549 ரன்கள் சேர்த்தது. இரு அணிகளும் மொத்தம் 77 பவுண்டரிகளையும் 38 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளது.
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளும் 7 சிக்ஸரும் விளாசி 83 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
பெங்களூரு அணி 16.1 ஓவரில் 6 விக்கெட்டினை இழந்து 205 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
23 பந்தில் தனது அரைசதத்தினை சிக்ஸர் விளாசி எட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆட்டத்தின் 14 ஓவரில் உனத்கட் பெங்களூரு அணிக்கு 21 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார்.
தினேஷ் கார்த்திக் லோம்ரோர் கூட்டணி 28 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
ஆட்டத்தின் 13வது ஓவரில் பெங்களூரு அணியின் லோம்ரர் இரண்டு சிக்ஸர்களும் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் பெங்களூரு அணி 25 ரன்கள் குவித்துள்ளது.
12.4 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் பெங்களூரு அணி 11 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 161 ரன்கள் தேவைப்படுகின்றது.
பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சௌரவ் சௌகான் தனது விக்கெட்டினை முதல் பந்திலேயே இழந்து வெளியேறினார். பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
பெங்களூரு அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.
வில் ஜேக்ஸ் தனது விக்கெட்டினை எதிர்பாராத விதமாக இழந்து வெளியேறினார்.
7.5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆட்டத்தின் 6வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
கடைசியில் களமிறங்கிய அப்துல் சமத் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் விளாசி 37 ரன்கள் குவித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த ஹென்றிச் க்ளாசன் தனது விக்கெட்டினை 31 பந்தில் 67 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
23 பந்தில் ஹென்றிச் க்ளாசன் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் சேர்த்துள்ளது.
டிராவிஸ் ஹெட் 41 பந்தில் 102 ரன்கள் சேர்த்து ஃபர்குசன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
டிராவிஸ் ஹெட் 39 பந்தில் தனது சதத்தினை எட்டி அசத்தியுள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 9வது ஓவரில் இழந்தது. 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.
7.3 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் சேர்த்தி அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
4.4 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்துள்ளது.
ஹைதராபாத அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை இந்த சீசனில் 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
தொடர் தோல்விகளைக் கண்டு வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது செய் அல்லது செத்து மடி போட்டியாகும். பெங்களூரு அணி தனது பிளே ஆஃப் கனவை உயிருடன் வைத்திருக்க அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 23 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. பெங்களூரு 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
விளையாடிய மொத்த போட்டிகள்: 23
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி: 12
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி : 10
முடிவு இல்லை: 0
கைவிடப்பட்டது: 1
பிட்ச் ரிப்போர்ட்:
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சாதகமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தது 180 முதல் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. முதலில் பேட் செய்தால் பெங்களூரு அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல்/ கேம் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரீஸ் டாப்லி/ லாக்கி பெர்குசன், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்/ யாஷ் தயாள் .
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி. நடராஜன்.
முழு அணிகளின் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், சவுரவ் சவுகான், சுயாஷ் பிரபுதேசாய், ராஜன், ராஜன் குமார், கர்ண் ஷர்மா, டாம் குர்ரான், லாக்கி பெர்குசன், மயங்க் டாகர், அல்ஜாரி ஜோசப், கேமரூன் கிரீன், அனுஜ் ராவத், மனோஜ் பந்தேஜ், யாஷ் தயாள், ஹிமான்ஷு ஷர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, ராகுல் திரிபாதி, ராகுல் திரிபாதி, ராகுல் திரிபாதி, , க்ளென் பிலிப்ஸ், அன்மோல்ப்ரீத் சிங், உபேந்திர யாதவ், ஜாதவேத் சுப்ரமணியன், சன்வீர் சிங், விஜயகாந்த் வியாஸ்காந்த், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, மார்கோ ஜான்சன், ஆகாஷ் மஹராஜ் சிங், மயங்க் அகர்வால்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -