Vijay Speech TVK 1st Year Anniversary: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா விறுவிறுப்பாக செங்கல்பட்டில் உள்ள பூஞ்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவில் கட்சித் தலைவரும், நடிகர் விஜய்யும் பேசினார்.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. பசங்க மாதிரி:
அப்போது, அவர் தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய விஜய் மும்மொழிக் கொள்கை குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, இதை செயல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டாங்களாம். LKG, UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குவாங்களா? அந்த மாதிரி இருக்கு. கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை.
இங்க வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. எவ்வளவு சீரியசா ஒரு பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. ரெண்டு பேரும். அதாங்க பாசிசமும், பாயாசமும், அதான் நம்ம அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும். இரண்டு பேரும் என்ன சொல்றாங்கனா, பேசி வச்சுகிட்டு செட்டிங் பண்ணி வச்சுகிட்டு மாத்தி, மாத்தி சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இட்ஸ் வெரி ராங் ப்ரோ:
இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? இவர்கள் இரண்டு பேரும் அடிச்சுக்குற மாதிரி அடிச்சுக்குவாங்களாம். அதை நாங்க நம்பனுமாம். மக்கள் நம்பனுமாம். What bro..? its very wrong bro!
இதுக்கு நடுவில நம்ம பசங்க உள்ளே புகுந்து சம்பவம் பண்ணிட்டு வெளியில வந்துட்றது. டிவிகே ஃபார் டிஎன் யார் சார் நீங்களா? எங்க சார் இருக்கீங்க? ஸ்லீப்பர் செல் மாதிரி. இதெல்லாம் மக்களுக்கு நாம் சொல்ல புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. அவங்களுக்கே தெரியும் ஏமாத்து வேலைனு. நம்ம ஊரு சுயமரியாதை ஊரு. நம்ம எல்லாரையும் மதிப்போம். சுயமரியாதையை மட்டும் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
மொழி திணிப்பு:
நாம எல்லா மொழியையும் மதிப்போம். அதுல மாற்றுக்கருத்தும் கிடையாது. தனிப்பட்ட முறையில யாரு வேண்டுமானாலும் எந்த ஸ்கூல்ல வேண்டுமானாலும் படிக்கலாம். அது அவங்க அவங்க தனிப்பட்ட உரிமை. ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தை மீறி மாநில மொழிக் கொள்கையை, கல்விக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால் அது அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ?
அதுனால், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொய் பிரச்சாரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நாம் உறுதியாக எதிர்ப்போம். நம்பிக்கையுடன் இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.