2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வரலாறு படைக்கும். 1967, 1977-ஐப் போல ஆட்சியைப் பிடிப்போம்.வரலாறு அமைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் விஜய் பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:


''அரசியல் என்றாலே வேற லெவல்தானே. யார் எங்கு எதிர்ப்பார்கள் எனத் தெரியாது. யார் யாரை ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அதை கணிக்கவும் முடியாது.


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்த எதிரியும் இல்லை.


அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்த எதிரியும் இல்லை. மக்களுக்கு மிகவும் பிடித்தவன் அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரும். அரசியல் கட்சிக்கு பலமே அரசியல் கட்சியின் கட்டமைப்புதான். ஆலமரம் போது வளர வேண்டுமென்றால், வேர்கள் விழுந்து வளர வேண்டும். அதனால்தான் மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.


அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்தபோது அவர்கள் பின்னால் நின்றவர்கள் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967 மற்றும் 1977இல் மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாறு படைத்தது.


1967, 1977-ஐப் போல ஆட்சியைப் பிடிப்போம்


2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வரலாறு படைக்கும். 1967, 1977-ஐப் போல ஆட்சியைப் பிடிப்போம்; வரலாறு அமைப்போம்.


நம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என கூறுகிறார்கள். ஏன் சாதாரணக் குடும்பத்தில் இருந்த அரசியலுக்கு வரக்கூடாதா? சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிது பெரிதாகச் சாதித்தார்கள். நம்முடைய கட்சி எளிய மக்களுக்கான கட்சிதானே? நம்முடைய கட்சி நிர்வாகிகள் எளிய குடும்பத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.


பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது


நம்முடைய கட்சி ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. முன்பெல்லாம் பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள்.  இப்போது கொஞ்சம் மாறிவிட்டது. பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிட்டார்கள்''.


இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.