ஐ.பி.எல் சீசன் 17:


ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.மைதானத்தில் நடைபெற்றது. அந்த வகையில் முதல் போட்டியிலேயே சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றது. தற்போது வரை 5 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சி.எஸ்.கே, ஆர்.ஆர், பஞ்சாப், குஜராத் மற்றும் கே.கே.ஆர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 






 


முன்னதாக ஐ.பி.எல் சீசன் 17-ன் முதற்கட்ட அட்டவணை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இதில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை முதற்கட்டமாக 21 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் இரண்டாம் கட்ட அட்டவணை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஐ.பி.எல் 2024 பிளேஆஃப் அட்டவணை:


 






அந்த வகையில் குவாலிஃபையர் 1 - குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. எலிமினேட்டர் போட்டியும் நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி மே 22ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், குவாலிஃபையர் 2 மே 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


முக்கியமாக ஐ.பி.எல் சீசன் 17-ன் இறுதிப் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இந்த போட்டி மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.  அதேபோல், மே 5 ஆம் தேதி பஞ்சாப் - சி.எஸ்.கே அணிகள் மோதும் போட்டியும் மே 9 ஆம் தேதி பஞ்சாப் - ஆர்.சி.பி அணிகள் மோதும் போட்டியும் தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் என்றும், மே 15 ஆம் தேதி ராஜஸ்தான் - பஞ்சாப் போட்டியும் மே 19 ஆம் தேதி ராஜஸ்தான்  - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியும் கவுகாத்தி மைதனாத்தில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவிற்குள் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.


 


மேலும் படிக்க: RCB vs PBKS, IPL 2024: வெற்றி கணக்கை தொடங்குமா ஆர்சிபி? - பெங்களூர் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்


 


மேலும் படிக்க: IPL 2024 Points Table: 5 போட்டிகளில் களம் கண்ட 10 அணிகள் - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் என்ன?