IPL 2024 Points Table: 5 போட்டிகளில் களம் கண்ட 10 அணிகள் - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் என்ன?

IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

Continues below advertisement

ஐபிஎல் 2024 கோலாகலம்:

சர்வதேச அளவில் அதிகம் பணம் புரளும் கிரிக்கெட் தொடராக, ஐபிஎல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் கோடைக்காலத்திலும் கிரிக்க்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடர் பெரும் விருந்தாக அமைகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர வீரர்களின் பேட்டிங்கை பார்க்க மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்பும் மற்றும் செல்போன் திரைகளிலும் ரசிகர்கள் குவிகின்றனர். இவர்களுக்கு இது பொழுதுபோக்காக இருந்தாலும், வெற்றியின் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு புள்ளிகளும் அணிகளுக்கு மிக முக்கியமாகும். அந்த புள்ளிகளின் அடிப்படையில் தான் லீக் சுற்றின் முடிவில் நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அண்மையில் தான் தொடங்கிய நிலையில், 10 அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி முடித்துள்ளன. அதன்முடிவில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது.

எண் அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
1 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1 1 0 2
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 1 1 0 2
3 பஞ்சாப் கிங்ஸ் 1 1 0 2
4 குஜராத் டைட்டன்ஸ் 1 1 0 2
5 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 1 0 2
6 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1 0 1 0
7 மும்பை இந்தியன்ஸ் 1 0 1 0
8 டெல்லி கேபிடல்ஸ் 1 0 1 0
9 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1 0 1 0
10 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 1 0 1 0

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் தொடரின் 6வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இதில் 9வது இடத்தில் உள்ள பெங்களூர் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், ஆறாவது இடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை மூன்றாவது இடத்தில்  உள்ள பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும். 

இதையும் படியுங்கள்: RCB vs PBKS, IPL 2024: வெற்றி கணக்கை தொடங்குமா ஆர்சிபி? - பெங்களூர் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

பிளே-ஆஃப் சுற்று:

தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் தலா 14 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும். வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் எலிமினேட்டரில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறும். அந்த அணியும், முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற அணியும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 

Continues below advertisement