IPL KKR vs RCB LIVE: இறுதிவரை பரபரப்பு..1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி!
ஆர்.சி.பி. - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
கடைசி வரை போராடிய பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த வகையில் பெங்களூரு அணி மொத்தம் 221 ரன்கள் எடுத்து தோல்வி.
பெங்களூரு அணி வீரர் பிரபுதேசாய் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 186 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 174 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
கேமரூன் கிரீன் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 145 ரன்கள் எடுத்துள்ளது.
பட்டிதர் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். 23 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
11 ஒவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 100 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 89 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு52 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூரு அணி வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு அச்சுறுத்தலாக ஆடிய விராட் கோலி 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள பெங்களூர் அணியின் விராட் கோலி - டூப்ளிசிஸ் ஜோடி அதிரடியாக ஆடி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 206 ரன்கள் எடுத்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மொத்தம் 7 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசி இருக்கிறார்.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களுடன் விளையாடி வருகிறது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிங்கு சிங் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 137 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஷ்ராயாஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் நிற்கின்றனர்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
கொல்கத்தா அணி வீரர் ரகுவன்ஷி 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் 15 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கொல்கத்தா அணி வீரர பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என மொத்தம் 48 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.
அதிரடியாக விளையாடி வந்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 48 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது.
Background
ஐ.பி.எல். தொடர் விறுவிறப்பாக நடைபெற்று வரும் சூழலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேருக்கு நேர் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் டுப்ளிசிஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கடந்த போட்டியில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட முகமது சிராஜ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆர்.சி.பி. அணியில் இன்றும் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் கடும் வெயில் நிலவி வருவதால் முதலில் பந்துவீசுவதே சிறந்தது என்பதால் ஆர்.சி.பி. அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா அணியில் பிலிப் சால்ட், சுனில் நரைன், ரகுவன்ஷி, ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரஸல், ரிங்குசிங், ராமன்தீப்சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா இடம்பிடித்துள்ளனர்.
பெங்களூர் அணியில் கேப்டன் டுப்ளிசிஸ், விராட் கோலி, வில் ஜேக்ஸ், ரஜத் படிதார். கிரீன், தினேஷ் கார்த்திக், லோம்ரார், கரண் சர்மா, பெர்குசன், யஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -