இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்கு (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யும் பணியை இந்தூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது தடை செய்யப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என இந்தூர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Continues below advertisement

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்தூர். நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7ஆவது முறையாக முதலிடம் பெற்ற நகரமாக இருக்கிறது இந்தூர். இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக இந்தூரை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தூரில் பிச்சை போடுவதற்கு தடை:

அதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது வழக்கு (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் பேசுகையில், "இந்தூரில் பிச்சை எடுப்பதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும்.

வரும் ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். இந்தூரில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அரசுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்: 

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா மற்றும் அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. 

இதுகுறித்து திட்ட அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறுகையில், "பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சாரத்தின் போது, ​​இந்தூர் நிர்வாகத்திற்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அறிக்கைகளைத் தயாரிக்கும்போது, ​​​​சில பிச்சைக்காரர்களுக்கு ஒரு பக்கா வீடு இருப்பதையும், சிலரின் பிள்ளைகள் வங்கியில் வேலை செய்வதையும் கண்டுபிடித்தோம்.

ஒருமுறை பிச்சைக்காரரிடம் ரூ 29,000 கிடைத்தது. மற்றொரு பிச்சைக்காரர் கடன் வாங்கி வட்டிக்கு பணம் வாங்குவது தெரிய வந்தது. இங்கு பிச்சை எடுக்க ராஜஸ்தானில் இருந்து ஒரு கும்பல் குழந்தைகளுடன் வந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டனர்" என்றார்.

இதுபற்றி மத்தியப் பிரதேச சமூக நலத்துறை அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹா பேசுகையில், "இந்தூரில் இயங்கி வரும் அமைப்பு ஒன்று அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இந்த அமைப்பு அவர்களுக்கு ஆறு மாதங்கள் தங்குமிடம் அளித்து அவர்களுக்கு வேலை தேடித் தரும். மக்களை பிச்சை எடுப்பதில் இருந்து விடுவிக்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம்" என்றார்.

 
Continues below advertisement
Sponsored Links by Taboola