GT vs PBKS LIVE Score: சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய குஜராத்; 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!
IPL 2024 GT vs PBKS LIVE Score Updates: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
20வது ஓவரை வீசிய நல்கண்டே முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா விக்கெட்டினை கைப்பற்றினார். அடுத்த பந்தை வைய்டாக வீச, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை ஒரு பந்தை மீதம் வைத்து எட்டியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிதேஷ் சர்மா தனது விக்கெடினை 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஜானி பேரிஸ்டோவ் தனது விக்கெட்டினை 22 ரன்கள் சேர்த்த நிலையில், பவர்ப்ளேவின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார்.
200 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 3.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் இருந்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் 48 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 89 ரன்கள் சேர்த்திருந்தார்.
குஜராத் 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சன் தனது விக்கெட்டினை 19 பந்தில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
கில் மற்றும் சுதர்சன் கூட்டணி 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11.4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
22 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டினை ஹர்ப்ரீத் பிரார் பந்தில் இழந்தார்.
பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 41 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நான்கு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 35 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 29 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
விருத்திமான் சாஹா தனது விக்கெட்டினை 13 பந்தில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 18 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவரின் கடைசிப் பந்தினை கில் சிக்ஸருக்கு விரட்டி மிரட்டிவிட்டுள்ளார். முதல் ஓவர் முடிவில் குஜராத் 7 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவரின் 4வது பந்தில் பஞ்சாப் அணி முதல் ரன்னை எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிராக குஜராத் அணி களமிறங்கியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில்(கேப்டன்), சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே
நடப்பு ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார். இவர் கடைசியாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவே இல்லை. இந்நிலையில், டேவிட் மில்லருக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், மில்லர் வெளியில் அமரவைக்கப்பட்டுள்ளார். மில்லருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் இன்று களமிறங்குகின்றார்.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
17வது ஐபிஎல் சீசனின் 17வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. 4 புள்ளிகளுடன் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற முயற்சிப்பதுடன் அதிக வித்தியாசங்களில் வெற்றி பெற்றால்தான் தனது ரன்ரேட்டினை நேர்மறையானதாக மாற்ற முடியும் என்பதால், குஜராத் அணி இன்றைய போட்டியில் தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோல் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது இடத்தில் உள்ளது. இப்படியான நிலையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி களமிறங்குகின்றது.
குஜராத் மற்றும் பஞ்சாப் இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத் அணி 2 போட்டிகளிலும், பஞ்சாப் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.
குஜராத் அணியின் சாத்தியமான ப்ளேயிங் லெவன்
ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே அல்லது மோகித் சர்மா
பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாத்தியமான ப்ளேயிங் லெவன்
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஷஷாங்க் சிங், ஹர்ஷல் படேல், ஹர்பீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர் அல்லது அர்ஷ்தீப் சிங்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -