Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!

Share Market: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

Continues below advertisement

இந்திய பங்குச்சந்தை தொடந்து சரிவடைந்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

Continues below advertisement

பங்குச்சந்தை கடந்த 9 செசன்களில் தொடர்ந்து 3,000 புள்ளிகள் சந்திதுள்ளது. முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தம் மேற்கொள்ள காரணமாக அமைந்தது. ஸ்மால்கேப், மிட்கேப் பிரிவுகளிலும் இழப்பு அதிகமாக உள்ளது. ரீடெயில் துறை முதலீட்டாளர்களும் கடும் சரிவை சந்திதுள்ளனர். 

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்வது தொடர்ந்து வருவதால் ரூ. 1 லட்சம் கோடி வெளியேறியுள்ளது. இது முதலீட்டாளர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவதை ஏற்படுத்தியுள்ளது. 

நிஃப்டி வரலாறு காணாத அளவு சரிவு:

நிஃப்டி 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சரிந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2019-ல் ஏப்ரல் 30 -மே 13 வரை நிஃப்டி தொடர்ந்து சரிந்து 5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதற்கு அடுத்த ஆண்டுகளில் 6 சதவீதம் மீண்டாலும் நிஃப்டி 22 ஆயிரத்தில் இப்போது வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 26 ஆயிரம் புள்ளிகளை நெருங்க வாய்ப்பிருந்தது. 

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் விற்பனை (FPI) விற்பனை:

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். அக்டோபர், 2024 முதல் விற்பனை தொடர்கிறது.  US bond yields, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, ஃபெரட்ல் வட்டி விகிதம் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடாதது ஆகிய காரணங்களால் விற்பனை செய்வது தொடர்கிறது. பிப்ரவரியில், foreign institutional investors பங்குகள் விற்பனை தொடர்வதால் ரூ. 2.75 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியே சென்றுள்ளது. 

அமெரிக்க வரி விதிப்பு முறை:

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பொருளாதார ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பை அறிமுகம் செய்தார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியானது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதாலும் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்நாடு முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வாரத்தின் முதல் நாளில்(பிப். 17) இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் முடிந்தது. தொடர்ந்து 8 நாள்களாக சரிவுடன் முடிந்த நிலையில், மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.  

இந்திய பங்குச்சந்தை  (17.02.2025)  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 57.65 அல்லது 0.076% புள்ளிகள் சரிந்து 75,996.86 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 30.25 அல்லது 0.13% புள்ளிகள் சரிந்து 22,959.50 ஆகவும் வர்த்தகமாகியது. நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்து வர்த்தகமானது. 

பங்குச்சந்தை இன்னும் ஒரு வாரத்திற்கு சரிவுடன் இருக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ஏற்றத்தில் வர்த்தகமாகவும் சில வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola