GT vs CSK LIVE Score: சென்னை அணியை பழி தீர்த்த குஜராத்; 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

IPL 2024 GT vs CSK LIVE Score Updates: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 10 May 2024 11:46 PM
GT vs CSK LIVE Score: இறுதிவரை களத்தில் இருந்த தோனி!

20வது ஓவர்வரை களத்தில் இருந்த தோனி மொத்தம் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார்.  மொத்தம் 11 பந்துகளை சந்தித்த தோனி 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.

GT vs CSK LIVE Score: சென்னை அணியை பழி தீர்த்த குஜராத்; 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

GT vs CSK LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்தது. 

GT vs CSK LIVE Score: டூபே அவுட்- களமிறங்கிய தோனி!

அதிரடியாக விளையாடி வந்த டூபே தனது விக்கெட்டினை 17வது ஓவரில் இழந்தார். இதையடுத்து தோனி களமிறங்கியுள்ளார். 

GT vs CSK LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: மொயின் அலி அவுட்!

சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி 36 பந்தில் 56 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்கையில் இழந்து வெளியேறினார். 

GT vs CSK LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: மிட்ஷெல் அவுட்!

12.2 ஓவர்கள் முடிவில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 34 பந்தில் 63 ரன்கள் சேர்த்திருந்தார். 

GT vs CSK LIVE Score: 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்!

டேரில் மிட்ஷெல் மற்றும் மொயின் அலி கூட்டணி 52 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: சென்னையை மீட்கும் டேரில் மிட்ஷெல் - மொயின் அலி; விக்கெட் வேட்டையை தொடங்க GT ப்ளேன்!

11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

GT vs CSK LIVE Score: அறிமுக போட்டியில் கார்த்திக் தியாகி!

குஜராத் அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய கார்த்திக் தியாகி முதல் ஓவர் வீசு உள்ளார். அதன்படி 6 வது ஓவரை அவர் வீசியுள்ளார்.

GT vs CSK LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.

GT vs CSK LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்துள்ளது.

GT vs CSK LIVE Score: மிட்செல் முதல் சிக்ஸர்!

சென்னை அணி வீரர் மிட்செல் முதல் சிக்ஸரை இன்றைய போட்டியில் 3.5 ஓவர்கள் முடிவில் அடித்துள்ளார்.

GT vs CSK LIVE Score: 3 ஓவர்கள் முடிந்தது!

3 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

GT vs CSK LIVE Score: கெய்க்வாட் அவுட்!

ருதுராஜ் கெய்க்வாட் 2 பந்துகள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இவரது கேட்சை ரசீத் கான் பிடித்துள்ளார்

GT vs CSK LIVE Score: முதல் பவுண்டரி!

மூன்றாவது ஓவரில் மூன்றாவது பந்தில் முதல் பவுண்டரியை அடித்துள்ளார் மிட்செல்

GT vs CSK LIVE Score: 2 ஓவர் முடிந்தது!

2 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 3 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

GT vs CSK LIVE Score: 2 ரன் 2 விக்கெட்!

2 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது சென்னை அணி. ரஹானே 1 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 1 ரன்னிலும் அவுட்.

GT vs CSK LIVE Score: ரச்சின் ரவீந்திரா அவுட்!

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா 1 ரன்னில் அவுட்.  உமேஷ் யாதவ் வீசிய பந்தில் டேவிட் மிட்செல் ரன் அவுட் செய்தார்.

GT vs CSK LIVE Score: முதல் ஓவரை வீசும் உமேஷ்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் உமேஷ் யாதவ் முதல் ஓவர் வீசுகிறார்.

GT vs CSK LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய சி.எஸ்.கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களம் இறங்கி உள்ளனர்.

தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடி ஆட்டம் ஆடிய குஜராத்; CSK-வுக்கு 232 ரன்கள் இலக்கு!

20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் சேர்த்தது. 

GT vs CSK LIVE Score: சுதர்சன் சதம்!

50 பந்துகளில் சாய் சுதர்சன் தனது சதத்தினை எட்டினார். 17 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் குவித்துள்ளது. 

GT vs CSK LIVE Score: கில் மிரட்டல் சதம்; குஜராத்தில் தடவும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

கில் 50 பந்துகளில் தனது சதத்தினை எட்டி சிறப்பாக விளையாடி வருகின்றார். 

GT vs CSK LIVE Score: சதத்தை நெருங்கும் கில் மற்றும் சுதர்சன்!

சுதர்சன் மற்றும் கில் தலா 96 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர். 

GT vs CSK LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 196 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது குஜராத். 

GT vs CSK LIVE Score: 90-களில் தொடக்க வீரர்கள்!

15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 190 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர்கள் இருவரும் 90 ரன்களைக் கடந்து அதிரடியாக ஆடி வருகின்றனர். சாய் சுதர்சன் 94 ரன்களிலும் கில் 93 ரன்களிலும் உள்ளனர். 

GT vs CSK LIVE Score: சிக்ஸர் மழை!

14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 179 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகின்றது. இதுவரை 12 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது. 

GT vs CSK LIVE Score: 150 ரன்களை எட்டிய குஜராத்!

குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் கில் மற்றும் சுதர்சன் கூட்டணி 13 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: அதிவேகமாக 1000 ஐபிஎல் ரன்களைத் தொட்ட இந்திய வீரர் - சாய் சுதர்சன்!

குஜராத் அணியின் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் தனது 25வது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றார். 


 






 

GT vs CSK LIVE Score: அதிரடியாக ஆடும் சுதர்சன்!

குஜராத் அணியின் சுதர்சன் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி வருகின்றார். இதுவரை 4 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசியுள்ளார். 

GT vs CSK LIVE Score: 130 ரன்களைத் தொட்ட குஜராத்!

11 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: கில் அரைசதம்!

அதிரடியாக விளையாடி வரும் கில் 25 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியது மட்டும் இல்லாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றார். 

GT vs CSK LIVE Score: 10 ஓவர்கள் முடிவில் கெத்து காட்டும் குஜராத்!

10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: 100 ரன்களை எட்டிய குஜராத்!

9.3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழக்காமல் 100 ரன்களை எட்டியுள்ளது. 

GT vs CSK LIVE Score: அரைசதம் விளாசிய சாய் சுதர்சன்!

32 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் தனது அரைசதத்தினை எட்டி சிறப்பாக விளையாடி வருகின்றார். 

GT vs CSK LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட்டினை இழக்காமல் 79 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: 50 ரன்களை எட்டிய குஜராத்!

5.3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: 50 ரன்களை நெருங்கும் குஜராத்!

5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: 40 ஓவர்கள் முடிந்தது!

40 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

GT vs CSK LIVE Score: சிக்ஸர் கணக்கைத் தொடங்கிய சுதர்சன்!

மூன்றாவது ஓவரின் 4வது பந்தினை சுதர்சன் சிக்ஸருக்கு விளாசினார். 

GT vs CSK LIVE Score: 20 ரன்களைக் கடந்த குஜராத்!

இரண்டு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 21 ரன்கள் சேர்த்து சீரான ரன்குவிப்பில் ஈடுப்பட்டு வருகின்றது. 

GT vs CSK LIVE Score: மிரட்டும் கில்!

முதல் ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் எதையும் விட்டுக்கொடுக்காமல், 14 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. இதில் கில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசியுள்ளார். 

GT vs CSK LIVE Score: பறந்த பவுண்டரி!

ஆட்டத்தின் மூன்றாவது பந்தினை எதிர் கொண்ட கில் அதனை அதிரடியாக பவுண்டரிக்கு விளாசினார். இந்த போட்டியில் கில் எதிர் கொள்ளும் முதல் பந்து இதுதான். 

GT vs CSK LIVE Score: ஹோம் கிரவுண்டில் கடைசி போட்டி!

குஜராத் அணிக்கு இந்த போட்டி நடப்புத் தொடரில் இன்றைய போட்டிதான் தனது சொந்த மைதானத்தில் களமிறங்கும் கடைசி போட்டியாகும். 

GT vs CSK LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்

GT vs CSK LIVE Score: குஜராத் அணியின் பிளேயிங் லெவன்!

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): ஷுப்மான் கில்(கேப்டன்), சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, கார்த்திக் தியாகி

GT vs CSK LIVE Score: களமிறங்கும் கில் படை; டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

CSK Vs GT, IPL 2024: சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 58 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது.  மும்பை, பஞ்சாப் அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன.  இதன் காரணமாக மீதமுள்ள ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் 8 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


சென்னை - குஜராத் பலப்பரீட்சை:


குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில்  உள்ள மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகளுமே, நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் சென்னை அணி  6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்க, குஜராத் அணி 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.  பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இரண்டு அணிகளுக்குமே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிக அவசியமாகும். நடப்பு தொடரில் ஏற்கனவே விளையாடிய போட்டியில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி, அதே உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறது. குஜராத் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பி, பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்க தீவிரம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது குஜராத் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்பட்டாலும், அங்கு நடந்த லீக் போட்டிகளிலும் நடப்பு தொடரில் அந்த அணி தோல்விகளை பதிவு செய்துள்ளது. கேப்டன் சுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் மொத்த அணியையும் பாதித்துள்ளது. சாய் கிஷோர் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகிய தமிழக வீரர்கள் ஓரளவிற்கு நம்பிக்கை கொடுக்கின்றனர். பந்துவீச்சில் குஜராத் அணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதே உண்மை. ரஷீத் கானால் கூட நடப்பு தொடரில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. சென்னை அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது பின்னடைவாக கருதப்பட்டாலும், கடைசி லீக் போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. இது அணியை உத்வேகப்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் ரகானே, சில போட்டிகளாக சோபிக்க தவறிய ஷிவம் துபேவால் பேட்டிங் ஆர்டர் பலவீனமாக உள்ளது. மேற்குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால், இன்றைய போட்டியிலும் சென்னை அணி தீர்வு காணலாம்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தலா3 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 214 ரன்களையும், குறைந்தபட்சமாக 143 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 206 ரன்களையும், குறைந்தபட்சமாக 133 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


அகமதாபாத் மைதானம் எப்படி?


நடப்பு தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில்,  குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும், சேஸிங் செய்யும் அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.


உத்தேச அணி விவரங்கள்:


சென்னை: அஜிங்க்யா ரகானே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி , மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே


குஜராத்: விருத்திமான் சாஹா, சுப்மன் கில் , சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.