மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது கஜகஸ்தான் நாடு. இந்த நாட்டில் உள்ள அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் இருந்து ரஷ்யாவில் உள்ள க்ரோஸ்னிக்கு 67 பயணிகள், விமானக் குழுவினர் 5 பேர் என மொத்தம் 72 பேருடன் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பயணம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
42 பேர் உயிரிழப்பு:
தி எம்பரர் 190 என்ற இந்த விமானம் அஜர்பைஜானில் தலைநகரின் பாகுவில் இருந்து ரஷ்யாவில் உள்ள செஸ்ன்யாவில் உள்ள க்ரோஸ்னி வரை சென்று கொண்டிருந்தது. ஆனால், க்ரோஸ்னியாவில் பனிமூட்டம் காரணமாக இந்த விமானம் திருப்பிவிடப்பட்டது. அப்போது கஜகஸ்தான் அருகே அக்தா விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கியது. இந்த நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களில் 14 பேர் வரை தற்போது உயிர் பிழைத்துள்ளனர். 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்து சிதறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறிந்து அறிந்தவுடனே அதிகாரிகள், தீயணைப்பு மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது வரை இந்த விமான விபத்தில் 42 பேர் வரை உயிரிழந்தனர்.
உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான விபத்து ஏன் ஏற்பட்டது? தொழில்நுட்ப கோளாறு காரணமா? விமானியின் தவறா? என்று விசாரணையும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தினத்தில் இப்படி துயர சம்பவம் நடந்தது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் இந்தியர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.