DC vs RR LIVE Score: ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி; ப்ளேஆஃப் ரேசில் தீவிரமாகும் போட்டி!
IPL 2024 DC vs RR LIVE Score Updates: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றியும் 6இல் தோல்வியும் சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோமன் பவுல் தனது விக்கெட்டினை முகேஷ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் டெல்லி அணி தனது வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
18வது ஓவரின் கடைசி பந்தை தூக்கி அடித்த அஸ்வின் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 3 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டினை குல்தீப் கைப்பற்றினார்.
ராஜஸ்தான் அணியின் ஃபெரிரியா குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபள்யூ முறையில் இழந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் 16வது ஓவரில் சஞ்சு சாம்சனும் 17வது ஓவரில் துபேவும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சஞ்சு சாம்சன் மற்றும் சுவம் துபே கூட்டணி 21 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14.1 ஓவரில் ராஜஸ்தான் அணி 152 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 6 ஓவர்களில் 74 ரன்கள் தேவைப்படுகின்றது.
13 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது, கேப்டன் சஞ்சு சாம்சன் 35 பந்தில் 74 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இவர் சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார்.
ஆட்டத்தின் 11 வது ஓவரின் கடைசிப் பந்தில் ரியான் ப்ராக் தனது விக்கெட்டினை ரிஷிக் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 22 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10.3 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்து இலக்கைத் துரத்தி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்து இலக்கைத் துரத்தி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் தனது விக்கெட்டினை பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை அக்ஷர் பட்டேல் கைப்பற்றினார். பட்லர் 17 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டினை இழந்து 221 ரன்கள் சேர்த்தது.
ஆட்டத்தின் 13வது ஓவரில் போரல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 36 பந்தில் 65 ரன்கள் சேர்த்திருந்தார். இவரது விக்கெட்டினை அஸ்வின் கைப்பற்றினார்.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் 31 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அஸ்வின் ஆட்டத்தின் 10வது ஓவரில் அக்ஷர் பட்டேல் விக்கெட்டினை கைப்பற்றினார். அக்ஷர் பட்டேல் 10 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார்.
8.2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 100 ரன்களை எட்டி சிறப்பாக விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
டெல்லி அணியின் சாய் ஹோப் தனது விக்கெட்டினை எதிர்பாராத விதமாக இழந்து வெளியேறினார். இவர் ஒரு பந்தினை எதிர்கொண்டு ஒரு ரன் சேர்த்திருந்தார்.
5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐந்தாவது ஓவரை வீச வந்த அஸ்வின் பந்தில், மெக்கர்க் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 20 பந்தில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
ஆட்டத்தின் 4வது ஓவரில் மெக்கர்க் 4 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் விளாசி இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 28 ரன்கள் குவித்தார். இவர் மொத்தம் 19 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி 6 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி அணி களமிறங்கியுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்/கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்பாடின் நைப், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்/ கேப்டன்), ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, ரோவ்மன் பவல், ஷுபம் துபே, ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
இந்தியன் பிரீமியர் லீக்கின் 56வது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7. 30 மணிக்கு நடைபெறுகிறது.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தானை டெல்லி வீழ்த்தினால் முதல் 4 இடங்களுக்குள்ளும், டெல்லியை ராஜஸ்தான் வீழ்த்தினால் பிளே ஆஃப்க்கும் செல்லும்.
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 28 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 முறையும், டெல்லி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 8 முறை மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக டெல்லி 5 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஸ்டேடியத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி கடந்த 2019ம் தேதி நடைபெற்றது. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இழக்கை எட்டியது.
கடந்த 5 ஐபிஎல் போட்டிகளில் DC vs RR ஹெட்-டு-ஹெட் சாதனை
- 2024 - ராஜஸ்தான் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2023- ராஜஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2022- டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2022- ராஜஸ்தான் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2021 - டெல்லி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அருண் ஜெட்லி பிட்ச் அறிக்கை:
ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சீசனில் இந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்யும்போதும் அல்லது இலக்கை துரத்தும்போதும் நிறைய ரன்கள் குவிக்கப்பட்டது. எனவே, இன்றைய போட்டியும் அதிக ரன்கள் குவிக்கும் போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடப்பு சீசனில் மூன்று போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. மொத்தமாக நடைபெற்ற 6 இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸை தவிர, மற்ற 5 இன்னிங்ஸ்களில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. மேலும், இந்த பிட்ச் அவ்வபோது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் செயல்படுகிறது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
டெல்லி கேபிடல்ஸ் அணி:
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குமார் குஷாக்ரா, குல்தீப் யாதவ், கலீல் அகமது, லிசாத் வில்லியம்ஸ், முகேஷ் குமார் வில்லியம்ஸ்
இம்பேக்ட் வீரர்: ரசிக் சலாம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், துருவ் ஜூரல், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா
இம்பேக்ட் வீரர்: யுஸ்வேந்திர சாஹல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -