ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத் அணிகள் ப்ளே ஆஃப் தகுதிக்குச் சுற்று பெற்றுவிட்டது. இந்த நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற உள்ள கடைசி அணி யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலே நேரடியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாம் என்ற சூழலில் சென்னை அணியும், குறிப்பிட்ட ரன் வித்தியாசம் அல்லது குறிப்பிட்ட ஓவர்களுக்குள் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற சூழலில் ஆர்.சி.பி. அணியும் இன்று களமிறங்குகின்றது.
பிரம்மாண்ட பேரணி:
பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்லாவிட்டாலும், தலா 5 முறை கோப்பையை வென்ற மும்பை மற்றும் சென்னை அணிக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரு அணி பெங்களூர் அணி மட்டுமே. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஆர்.சி.பி. ரசிகர்கள் பல பதிவுகளை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சின்னசாமி மைதானத்திற்கு வெளியே இன்று காலை ஆர்.சி.பி. ரசிகர்கள் மிகப்பெரிய பைக் பேரணி ஒன்றை நடத்தினர். இதில், நூறுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஆர்.சி.பி. ரசிகர்கள் பெங்களூர் அணியின் கொடியையை கையில் ஏந்தியபடி உலா வந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்வத்தில் ரசிகர்கள்:
இன்றைய போட்டி மழை காரணமாக பாதிக்கப்படலாம் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஐ.பி.எல். வரலாற்றிலே அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை தன்வசம் வைத்திருந்த பெங்களூர் அணி தன்னுடைய சொந்த சாதனையை தனக்கு எதிராகவே ஹைதரபாத்திடம் இந்த தொடரில் இழந்தது. ஆனாலும், அந்த போட்டியில் 288 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியின் போராட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
அதே, ஹைதரபாத் அணிக்கு எதிராக வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூர் அணி இன்று ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டி வரை முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: CSK: தோனின்னு சொன்னாலே அப்செட்.. ஜடேஜாவை போட்டுக்கொடுத்த முன்னாள் சி.எஸ்.கே வீரர்!
மேலும் படிக்க: MS Dhoni: CSK ரசிகர்கள் நெஞ்சில் விழுந்த இடி..RCB க்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டாரா?