ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டன.


கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே தற்போது ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. 


அந்தவகையில் மே 18 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 68 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக இருக்கிறது.  


முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி மீதான எதிர்பார்ப்பு தான் அதிகம் உள்ளது. 42 வயது ஆனாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் தோனி. அதேபோல், சென்னை அணி விளையாடும் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மைதானத்தில் குவிகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்கள் தோனி மீது அன்பை பொழிந்து வருகின்றனர். 


கடுப்பான ஜடேஜா:



இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரரான அம்பத்தி ராயுடு அது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நானும், ஜடேஜாவும் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடித்தால் கூட ரசிகர்கள் அமைதியாக இருப்பார்கள்.


கடந்த சில வருடங்களாக நானும் ஜடேஜாவும் இதை உணர்ந்தோம், எனவே சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் தோனியின் ரசிகர்கள். பின்பு தான் சென்னை ரசிகர்கள் என்று நான் சொல்வேன். அதற்காக ஜடேஜா மிகவும் கடுப்பானார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறியுள்ளார் அம்பத்தி ராயுடு.


மேலும் படிக்க: Riyan Parag: அடேங்கப்பா..ரோகித் சர்மா, ரிஷப் பண்டுக்கு அப்புறம் இப்டி ஒரு சாதனையா; அசத்தும் ரியான் பராக்!


 


மேலும் படிக்க: Rohit Sharma: என்னது..! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? ஓப்பனாக பேசிய ஹிட்- மேன்!