ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் எம்.எஸ்.தோனி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.


இறுதிக்கட்டத்தில் ஐபிஎல்:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டன.


அதேநேரம் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உட்பட 5 அணிகளுக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கடும் போட்டி நிலவிகிறது.


 இந்நிலையில் மே 18 ஆம் தேதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய போட்டியாக இருப்பதால் ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி இந்த சீசனில் இருந்து வெளியேறிவிடும்.


தோனி விளையாடுவாரா?


இச்சூழலில் தான் இந்த போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டும் தான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.


அப்படி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடலாம். ஆனால் ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தால் தோனி கூறியதை போல் அவரது கடைசி போட்டி சேப்பாக்கத்தில் தான் என்பது பொய்யாக்கூடும்.


இதானால் சின்னசாமி மைதானத்தில் தோனி களம் இறங்க மட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல் தோனி இல்லாமல் அணியை வெற்றி பெற வைத்து இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சம்பவம் செய்ய வைப்பார் ருதுராஜ் கெய்க்வாட் என்றும் ரசிகர்கள் கருத்து கூறுகின்றன.


முன்னதாக இந்த சீசனில் 13 லீக் போட்டிகள் விளையாடி உள்ளார் எம்.எஸ்.தோனி. இதில் 8 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். 226.67 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 136 ரன்களை விளாசி இருக்கிறார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். அதிகபட்சமாக 37* ரன்களை எடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!


 


மேலும் படிக்க: Riyan Parag: அடேங்கப்பா..ரோகித் சர்மா, ரிஷப் பண்டுக்கு அப்புறம் இப்டி ஒரு சாதனையா; அசத்தும் ரியான் பராக்!