ராயல் சேலஞ்சர்ஸ்-பெங்களூரு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஃபேன் கேர்ள் ஒருவர் ஆர்சிபி அணிக்காக அழுத வீடியோ வைரலாகி வருகிறது.


நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.


இந்தப் போட்டியில் ஃபேன் கேர்ல் ஒருவர் ஆர்சிபி வெற்றிக்குப் பின்னர் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது இணையத்தில் வைரலாகி வருகிறது. #RCBvsLSG #ViratKohli #LSGvRCB என்ற ஹேஷ்டேகுகளுடன் ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரான் சிக்ஸர்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தபோது, ஆர்சிபி ரசிகை ஒருவர் அழுத ரியாக்ஷன் உடனடியாக தீயாய் பரவியது. 






நகத்தை கடிக்கும் அளவுக்கு பரபரப்பும், டிராமாகவும் நிறைந்த போட்டியாக நேற்றைய லக்னோ - பெங்களூரு போட்டி அமைந்த நிலையில், ஏகப்பட்ட வித்யாசமான விஷயங்களும், நிறைய சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன.


பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கோலி, டூப்ளசி மற்றும் மேக்ஸ்வெல் என மூவரும் அரைசதம் கடந்து அசத்தியிருந்தனர். மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ஃபாப் டு பிளஸிஸ் திடீரென விஸ்வரூபம் எடுத்து அடித்த இரண்டாவது சிக்ஸ், மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. 116 மீட்டர்களை தொட்ட அந்த சிக்ஸர் இந்த தொடரின் அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸராக மாறியது. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட தொலைதூர சிக்ஸர் பட்டியலில் 16 வருடங்களாக அழிக்க முடியாமல் ஆல்பி மோர்க்கல் பெயர் உள்ளது. 


213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவரில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19-வது ஓவரில் பதோனி, ஹிட் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். ஒரு வழியாக வெற்றிக்கான ரன்களை போராடி எடுத்தனர் அந்த அணியின் டெயில் எண்ட் பேட்ஸ்மேன்கள்.


போட்டியை வென்ற களிப்பில் ஆவேசத்தை வெளிப்படுத்திய ஆவேஷ் கானுக்கு ஐபிஎல் கோட் ஆஃப் கான்டாக்டை மீறியதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 'லெவல் 1' தவறு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.


இந்த ஒட்டுமொத்த போட்டியில் லக்னோ அணியின் கவுதம் கம்பீரின் ஆக்ரோஷம் பார்ப்போரை அஞ்ச வைத்தது. வென்றதும் கத்திக்கொண்டு மைதானத்திற்கு வந்தது முதல், ஆர்சிபி ரசிகர்களை நோக்கி வாயில் விரல் வைத்து சைகை செய்தது வரை உச்சகட்ட பெருமிதத்துடன் மைதானத்தில் நின்றுகொண்டிருந்தார்.