இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், 2022 ஐபிஎல் தொடரின் 11 பேர் கொண்ட சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


15வது ஐபிஎல் தொடர் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. குறிப்பாக இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இந்த சீசனில் இணைந்தது. இரு அணிகளும் தங்கள் முதல் பயணத்திலேயே பிளேஆஃப்களுக்குள் நுழைந்தன. மேலும், குஜராத் டைட்டன்ஸ் முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.


இர்பான் பதானின் சிறந்த ஐபிஎல் அணி


இந்த சீசன் சில சிறந்த வீரர்களின் அற்புதமான ஆட்டத்தை காண முடிந்தது. புதிய வீரர்களும் தனது ஆட்டத்தால் பலரையும்  திகைக்க வைத்தனர். இந்த சீசனின் சில சிறந்த வீரர்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் ஐபிஎல் 2022 இன் சிறந்த லெவன் அணியை அறிவித்துள்ளார்.


ஜோஸ் பட்லர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருடன் பதானின் வரிசை தொடங்குகிறது.  3வது இடத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை பதான் தேர்வு செய்தார். சாம்சன் தனது அணியை ஐபிஎல் 2022 இன் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார், தொடக்க சீசனுக்குப் பிறகு அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 


பாண்டியா கேப்டன்


பதானின் மிடில்-ஆர்டர் பேட்டர்களில் ஐபிஎல் 2022 வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா, அதைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் திறமையான பவர்-ஹிட்டர்கள் முறையே லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பதான் இரண்டு பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களை குஜராத் டைட்டன்ஸ் துணை கேப்டன் ரஷித் கான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் ஹர்ஷல் படேல் வடிவில் தனது லெவனில் இல் சேர்த்தார். 


டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஆகியோரும், குல்தீப் யாதவ்  12வது வீரராக பந்துவீச்சு பிரிவில் இடம்பெற்றுள்ளனர். 


ஐபிஎல் 2022 இன் இர்பான் பதானின் சிறந்த XI: ஜோஸ் பட்லர், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர், ரஷித் கான், ஹர்ஷல் படேல், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக், 12வது வீரர் குல்தீப் யாதவ்.


 






இர்பான் பதான் தேர்வு செய்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண