செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார். 


இந்நிலையில் நார்வேயில் நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்று இருந்தார். இந்தத் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த கார்ல்சனை வென்றார். இதன்மூலம் 2017ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். 






கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை வீழ்த்தியிருந்தார். அதற்குபின்பு தற்போது அவர் வீழ்த்தியுள்ளார். ஏற்கெனவே உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டு முறை தோற்கடித்துள்ளார். முதலில் அவர் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரிலும் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் தோற்கடித்திருந்தார். பிரக்ஞானந்தா செசசிபிள் மாஸ்டர் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தார். அடுத்து சென்னையில் நடைபெற உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்க உள்ளார். இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த 2 மாதங்களுக்குள் மூன்று முறை உலக சாம்பியன் மேகன்ஸ் கார்ல்சனை இந்தியர்கள் தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண