MI vs RCB Live: 79/2 முதல் 111/10 வரை ; 32 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை படுதோல்வி

துபாய் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் 6-வது இடத்தில் மும்பை அணியும் மோதுகின்றன,

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 26 Sep 2021 11:56 PM

Background

ஐ.பி.எல். தொடரின் 39வது ஆட்டம் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் 6-வது இடத்தில் மும்பை அணியும் மோதுகின்றன,


ஐ.பி.எல். வரலாற்றில் 6 முறை சாம்பியனான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணி 19 போட்டிகளிலும், பெங்களூர் அணி 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.