தமிழ்நாட்டில் திருப்பூர் தேனி், திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த சில மணி நேரமாக கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வானிலை:
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து இனங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
17-03-2025 முதல் 21-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும்.
சென்னை வானிலை :
இன்று (17-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (18-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சிய்ஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை இல்லை எனவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.