BJP Annamalai Attacks TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் பேசுகிறார். விஜய்யை போன்று நடிகையின் இடுப்பைக் கிள்ளி அரசியல் செய்கிறேனா என்று அண்ணாமலை பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவுக்கு எதிரான போராட்டத்தில் விஜய்யை, அண்ணாமலை ஏன் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.
டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு போராட்டம்:
திமுக அரசு டாஸ்மாக் ஊழல் செய்ததாக கூறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டததை பாஜகவினர் எடுத்ததனர். இதனால் அண்ணாமலை , தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை 6 மணி ஆகியும் விடுதலை செய்யப்படாத நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தை எடுத்தனர் பாஜகவினர். இதையடுத்து, மாலை 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இதனால், பாஜகவினர் கடும் கோபமடைந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணமலை திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். டாஸ்மாக் ஊழலின் A1 குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் ஏ2 அமைச்சர் செந்தில் பாலாஜி என்றும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழ்நாடு காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார்.
இதனால் மதுக்கடைகள் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
விஜய்யை தாக்கிய அண்ணாமலை:
அண்ணாமலை தொடர்ந்து பேசுமையில், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக தாக்கினார்“ விஜய், ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செய்கிறார். விஜய்யை போன்று நடிகையின் இடுப்பைக் கிள்ளி அரசியல் செய்கிறேனா, நாடகம் போடுவது விஜய். வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home ) பாலிடிக்ஸ் பன்னிகிட்டு, பேச கூடாது. திமுகவின் பி டீம் விஜய் என கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் அண்ணாமலை.
ஏன் விஜய் மீது அண்ணாமலை தாக்குதல்:
பாஜகவும் - திமுக மறைமுக கூட்டணி என்றும், இருவரும் நாடகமாடுவதாக தவெக தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதனால் அண்ணாமலை விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார்.
இன்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது , “ அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, அதில் : ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
மாறாக, அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர். தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை! நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?
தற்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க. -தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது, இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.எனவே, ஒன்றிய அரசுக்குத் தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமெனில், டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு. சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் வழியில் வலியுறுத்துகிறேன் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.