SRH vs RR LIVE: போகிற போக்கில் வெற்றி பெற்றது ஐதராபாத்.. பொறுப்போடு ஆடிய கேப்டன் வில்லியம்சன்!
IPL 2021, Match 40, SRH vs RR LIVE: ஐபிஎல்லின் இரண்டாம் கட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி அடைந்தது. பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை அடைய வைத்த வில்லியம்சன் அரைசதமும் அடித்து அசத்தினார்.
17.2 ஓவரில் 150 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அணி, இன்னும் 15 பந்தில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி
15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.
13 ஓவரில் முடிவில் மூன்றாவது விக்கெட்டை இழந்தது ஹைதராபாத். வந்த வேகத்திலேயே பிரியம் கார்க் பெவிலியன் திரும்பினார்.
ஹைதராபாத் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அபாரமாக விளையாடிய வந்த ராய் (60 ரன்கள்), சக்காரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள்.
11 ஆவது ஓவர் முடிவில் 111/1 . இந்த ஓவரில் மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டது.
10 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்த ஹைதராபாத், முதல் சிக்ஸரை விளாசிய வில்லியம்சன்.
10 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்த ஹைதராபாத், முதல் சிக்ஸரை விளாசிய வில்லியம்சன்
8 ஓவர் முடிவில் 75-1
7 ஓவர் முடிவில் ஹைதராபாத் ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 7, ராய் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஹைதராபாத் அணி முதல் விக்கெட்டை இழந்தது. சாஹா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சான் அவரை ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்கசெய்தார். பவர்பேளயில் அந்த ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது.
ஹைதாராபாத் அணி 50 ரன்கள் எடுத்தது. 5 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது. இந்த ஓவரில் 4 பவுண்டரிகளை ராய் விளாசினார்.
4ஆவது ஓவர் முடிவில் ஹைதாராபாத் 39 ரன்கள் எடுத்தது. இன்றைய போட்டியில் அறிமுகமாக ராய் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.
உனத்கட் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றினார் சாஹா. இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. 26/0
இரண்டாவது ஓவரில் ஹைதராபாத் 14 ரன்கள் எடுத்தது. ராய் 6, சாஹா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஹைதராபாத் முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களாக ராய், சாஹா களமிறங்கியுள்ளனர்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 165 ரன்கள் நிர்ணயித்துள்ளது.
பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடிய சாம்சன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். கால் பந்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரியான் பராக்கும் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார்.
13.4 ஓவரில் 100 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணி. சாம்சன் 37, லோம்ரார் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
9ஆவது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை இழந்த ராஜஸ்தான். சந்தீப் சர்மா (36 ரன்கள்) பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் கிளீன்போல்ட் ஆனார். இதனைத்தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 24, சாம்சன் 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
5 ஆவது ஓவரை ஹோல்டர் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
நான்கு ஓவர் முடிவில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. புவனேஷ்வர் குமார் வீசிய இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
3 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 15, சாம்சன் ஒரு ரன் எடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்தது. புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் லீவிஸ் ஆட்டமிழந்தார். அடுத்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கியுள்ளார்.
முதல் ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்தது. லீவிஸ், ஜெய்ஸ்வால் தலா ஒரு பவுண்டரிகள் அடித்தனர்.
சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்காக ஜேசன் ராய் இன்றைய போட்டியில் அறிமுகமாகிறார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதுவரை ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் 14 முறை மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஏழு முறை வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவில் ஐபிஎல்லின் முதல் கட்டத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதியது, இதில் ராஜஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்லின் இரண்டாம் கட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸிடம் அணியிடம் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில், ஹைதராபாத் இரண்டாவது கட்டத்தில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் தற்போது 9 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறம், இந்த ஆண்டு ஐபிஎல்லில் ஹைதராபாத்தின் ஆட்டம் மோசமாக இருக்கிறது. அந்த அணி 9 போட்டிகளில் 8ல் தோல்வியடைந்துள்ளது.
Background
IPL 2021, SRH vs RR LIVE Updates:
2021 ஐபிஎல் தொடரின் 40ஆவது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும். ராஜஸ்தான் தற்போது 9 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறம், இந்த ஆண்டு ஐபிஎல்லில் ஹைதராபாத்தின் ஆட்டம் மோசமாக இருக்கிறது. அந்த அணி 9 போட்டிகளில் 8ல் தோல்வியடைந்துள்ளது. ஹைதராபாத் தற்போது 2 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது மற்றும் பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தானுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருந்தாலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நோக்கிலே விளையாடும். ஐபிஎல்லின் இரண்டாம் கட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸிடம் அணியிடம் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில், ஹைதராபாத் இரண்டாவது கட்டத்தில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -