New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்

New Year 2025 Celebraton: 2025 புத்தாண்டை நள்ளிரவு 12 மணியளவொல் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Continues below advertisement

New Year 2025 Celebraton: புத்தாண்டை ஒட்டி சிறப்பு பிரார்த்தனைக்காக, பொதுமக்கள் கோயில் மற்றும் தேவாலயங்களில் குவிந்தனர்.

Continues below advertisement

வந்தாச்சு புத்தாண்டு 2025:

2024 முடிந்து நள்ளிரவு 12 மணியளவில் பிறந்த 2025 எனும் புத்தாண்டை இந்திய மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக தமிழக மக்களும் புத்தாண்டு பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவில் பட்டாசு வெடித்தும், பாடல்களை பாடியும், கேக் வெட்டியும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்தும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர். சாலைகள் தொடங்கி நட்சத்திர விடுதிகள் வரையிலும், ஆடல் பாடலுடன் புத்தாண்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது. ”ஹேப்பி நியூ இயர்” என முழங்கியும், உடன் இருந்தவர்களிடம் கைகளை குலுக்கியும், வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும் புத்தாண்டை வரவேற்றனர். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்:

வழிபாட்டு தலங்களில் குவிந்த பொதுமக்கள்:

புத்தாண்டை பிறப்பை ஒட்டி கோயில் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு முதலே சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் வழிபாட்டு தலங்களில் குவிந்து வருகின்றனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் முதல் ட்ரோன் ஷோ நடைபெற்றது. ஏலோ லைட் எனும் நிறுவனத்துடன் இணைந்து காவல் துறையினர் ட்ரோன் ஷோ நடத்தினர். நாகை வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, கோவை, குமரி நெல்லையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுகோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது. ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை போட்டியாளர்கள் கவர்ந்தனர். இதனிடயே, புத்தாண்டையொட்டி ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர கண்காண்ப்பில் ஈடுபடனர். பொதுமக்கள் மற்றும் தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தன.

Continues below advertisement