ஐ.பி.எல் 2012:
ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஐபிஎல் ரீகேப் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்பான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் நான்காவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அது தான் இறுதி போட்டிக்கு செல்வது முதல் முறை. இதனால் எப்படியும் ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று விட வேண்டும் என்று களம் இறங்கியது காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹஸ்ஸி மற்றும் முரளி விஜய் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்படி, ஹஸ்ஸி 54 ரன்களும் , முரளி விஜய் 42 ரன்களையும் குவித்தனர். பின்னர் வந்த குட்டி தல சுரேஷ் ரெய்னா 38 பந்துகளில் அரைசதம் விளாசினார். 3 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 73 ரன்களை குவித்தார்.
முதல் முறை ஐ.பி.எல் சாம்பியனான கொல்கத்தா அணி:
இதனை அடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியரது கொல்கத்தா அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மன்விந்தார் பிஸ்லா மற்றும் காம்பீர் களம் இறங்கினர். இதில் கம்பீர் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் அதிரடியாக விளையாடினார் பிஸ்லா. 48 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸரை பறக்க விட்டு மொத்தம் 89 ரன்களை குவித்தார். மறுபுறம் ஜாக்யூஸ் காலிஸ் 69 ரன்களை விளாசினார். விறுவிறுப்பான இந்த போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தவகையில் முதன் முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை 2012 ஆம் ஆண்டு கைப்பற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அதிக ரன்கள் எடுத்த வீரர்:
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல். அந்த சீசனில் மட்டும் அவர் 733 ரன்களை குவித்தார்.
அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்:
அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் டெக்கான் ஜார்சர்ஸ் அணி வீரர் மோர்கள. மொத்தம் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேன் ஆப் தி மேட்ச்:
2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மன்விந்தெர் பிஸ்லா.
ஆரஞ்சு தொப்பி:
2011 ஆம் ஆண்டை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டும் ஆரஞ்சு நிற தொப்பி கிறிஸ் கெய்ல்-க்கு தான் வழங்கப்பட்டது.
மேன் ஆப் தி சீரிஸ்:
மேன் ஆப் தி சீரிஸ் விருதை வென்றவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேன்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!