GT vs RR, IPL 2023 LIVE: இறுதியில் ருத்ரதாண்டவமாடிய ராஜஸ்தான்; குஜராத் அணியை முதல் முறை வீழ்த்தி அசத்தல்..!
IPL 2023, Match 23, GT vs RR: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணி கடந்த சில ஓவர்களாக அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்தில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
களமிறங்கியது முதல் பொறுப்புடன் விளையாடி வரும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 29 பந்தில் 50 ரன்கள் சேர்த்துள்ளார்.
ராஜஸ்தான் அணி ஓவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசி வருகின்றனர். இதனால், 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளனர்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசியுள்ளார். 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது.
11வது ஓவரை வீசிய ரஷித் கானின் பந்தில் ரியான் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ள ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் ராஜஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வந்த படிக்கல் தனது விக்கெட்டை ரஷித் கானிடம் இழந்து வெளியேறினார்.
நிதானமாக ஆடி வந்த ராஜஸ்தான் அணி 8ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 46 ரன்கள் சேர்த்துள்ளது.
19வது ஓவரின் கடைசி பந்தில் அபினவ் 13 பந்தில் 27 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த ஓவர் முடிவில் 166 - 5 .
18 வது ஓவரில் அபினவ் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். இந்த ஓவர் முடிவில் 154 - 4 .
இறுதி ஓவர்களில் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ள குஜராத் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ரன்கள் சேர்த்து வரும் குஜராத் அணி 16 ஓவர்கள் முடிவில் நான்குவிக்கெட்டை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவர் 34 பந்தில் 45 ரன்கள் சேர்த்தார்.
நிதானமாக ரன்கள் சேர்த்து வரும் குஜராத் அணி 15 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணி சுழல் பந்தினால் குஜராத் அணியை ரன் எடுக்க விடாமல் தடுத்து வருகிறது. 14 ஓவர்கள் முடிவில் அந்த அணி 107 - 3 .
13வது ஓவரை வீசிய ஆடம் ஜாம்பா அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவர் முடிவில் குஜராத் 102- 3.
அதிரடியாக ரன் சேர்த்து வரும் குஜராத் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் குஜராத் அணி 11 ஓவர்கள் முடிவில் 3விக்கெட்டை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் குஜராத் அணி 9 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கத்தில் நிதானமாக ஆடி வந்த குஜராத் அணி 8 ஓவர்கள் முடிவில் 72 - 2 .
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் குஜராத் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ள குஜராத் அணி பவர்ப்ளே முடிவில் 42 ரன்கள் சேர்த்துள்ளனர்.
5வது ஓவரின் கடைசிப் பந்தில் சாய் சுதர்சன் ரன் அவுட் ஆனார். இந்த ஓவர் முடிவில் குஜராத 32 - 2
4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து இருந்தாலும் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறது. 3 ஓவர்கள் முடிவில் அந்த அணி 24 ரன்கள் சேர்த்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணியின் சஹா தனது விக்கெட்டை போல்ட் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்துள்ள மோதல்கள் தொடர்பான புள்ளி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராஜஸ்தான் - குஜராத் மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான குஜராத் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். முன்னதாக, இரு அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த போட்டிகளின், முடிவுகள் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம்.
ராஜஸ்தானிற்கு ஹாட்ரிக் தோல்வி:
ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு அறிமுகமானதோடு முதல் சீசனிலேயே கோப்பையையும் வென்ற குஜராத் அணி, இதுவரை ராஜஸ்தான் அணியுடன் மூன்று முறை விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியின் மூலம், தொடர் தோல்விகளுக்கு ராஜஸ்தான் அணி குஜராத் அணியை பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச, குறைந்தபட்ச ஸ்கோர் விவரங்கள்:
குஜராத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 188
ராஜஸ்தான் அணிக்கு எதிரான குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 192
குஜராத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 130
ராஜஸ்தான் அணிக்கு எதிரான குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 133
தனிநபர் சாதனைகள்:
குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர் - ஜோஸ் பட்லர் (182), ராஜஸ்தான்
குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் - ஹர்திக் பாண்ட்யா (5), குஜராத்
குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - ஜோஸ் பட்லர் (89), ராஜஸ்தான்
குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு - ஹர்திக் பாண்ட்யா (3/17), குஜராத்
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் தலா 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், குஜராத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ராஜஸ்தான் உத்தேச அணி:
ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், ஜூரெல், அஷ்வின், ஜேசன் ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல்
குஜராத் உத்தேச அணி:
சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஸ்வா லிட்டில்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -