GT vs PBKS, IPL 2023 LIVE: பஞ்சாப்பை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பிய குஜராத்..!
IPL 2023, Match 18, GT vs PBKS: பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
20வது ஓவரின் ஐந்தாவது பந்தில் குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டி, பஞ்சாப்பை வீழ்த்தியது.
சாம் கரன் வீசிய 20வது ஓவரின் இரண்டாவது பந்தில் கில் க்ளீன் போல்ட் ஆனார்.
19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் குஜராத் 141 - 3.
16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வரும் கில் 40 பந்தில் தனது அரைசத்தினை எட்டியுள்ளார்.
15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 15வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இரண்டு விக்கெட்டை இழந்து ஆடிவரும் குஜராத் அணி 14 ஓவர்கள் முடிவில் 105 ரன்கள் குவித்துள்ளது.
கடந்த ஓவரில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்ததால், 13 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் குஜராத் அணி 12 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதல் நிதானமாக ஆடிவந்த சாய் சுதர்சன் அர்ஷ்தீப் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் குஜராத் அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 88 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் கட்டுக்கோப்பாக பந்து வீசுவதால் குஜராத் அணி நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதல் கில் அதிரடியாக ஆடி வருவதால் குஜராத் அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் சேர்த்துள்ளது.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் குஜராத் அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடி வரும் ஷாரூக் கானால் 19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்துள்ளது.
19வது ஓவரின் முதல் பந்தில் பஞ்சாப் அணியின் சாம்கரன் தனது விக்கெட்டை இழந்தார்.
நிதானமாக ஆடி வந்த ராஜபக்ச 25 பந்தில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, 17 ஓவர்கள் முடிவில் 121 - 5 என்ற நிலையில் இருந்தது.
நிதானமாக ஆடிவரும் பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
ரன் குவிப்பில் தடுமாறி வரும் பஞ்சாப் அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது.
13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 94 - 4.
ஜிதேஷ் சர்மா தனது விக்கெட்டை மொகித் சர்மாவிடம் இழந்து வெளியேறினார். இவர் 23 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.
நிதான ஆட்டத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடிவந்த பஞ்சாப் அணியின் ராஜபக்சா 11வது ஓவரில் பவுண்டரி விரட்டினார். இந்த ஓவர் முடிவில் அந்த அணி 81 - 3.
10வது ஓவரில் பஞ்சாப் அணி 4 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இதனால் இந்த ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டை இழந்து 71 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த மேத்யூவ் ஷார்ட் ஆட்டமிழந்த பிறகு, பஞ்சாப் அணி நிதானமாக ஆடி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் 63 - 3.
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 59 - 3 என்ற நிலையில் உள்ளது.
அதிரடியாக ஆடிவந்த மேத்யூவ் ஷார்ட் 24 பந்தில் 36 ரன்கள் சேர்த்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆனார்.
விக்கெட்டுகளை இழந்தாலும் ரன் குவிப்பில் கவனம் செலுத்திய பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஐந்து ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு விக்கெட்டை இழந்துள்ள பஞ்சாப் அணி 4 ஓவர்கள் முடிவில் 30 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பவுண்டரிகளில் ரன் சேர்த்து வரும் பஞ்சாப் அணி மூன்று ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 27 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் அணி இரண்டாவது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவரில் விக்கெட் விழுந்ததாலும் பஞ்சாப் அணியின் ஷார்ட் அடுத்தடுத்து பவுண்டரியுடன் தனது ரன் கணக்கை தொடங்கினார். இந்த ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்னரே ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. ப்ராப் சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்துள்ளார்.
Background
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்,
குஜராத் டைட்டன்ஸ் அணி தனது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான வெற்றிகளுடன் தொடங்கியது. இருப்பினும், தங்களது கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை, தங்களது தொடக்க இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக வென்றது. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இந்தநிலையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர் மோதிய விவரங்களை பார்க்கலாம்.
நேருக்கு நேர்:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இவர்கள் மோதிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- விளையாடிய போட்டிகள் - 2
- பஞ்சாப் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 1
- குஜராத் டைட்டன்ஸ் வென்ற போட்டிகள் - 1
மொஹாலி மைதானம்:
பஞ்சாப் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இந்தப் போட்டியை மொஹாலியின் பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் நடத்தவுள்ளது. முந்தைய ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் மகாராஷ்டிராவில் இரண்டு முறை சந்தித்தன. பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் அவர்கள் சந்திக்கும் முதல் போட்டி இன்று நடக்கிறது.
தகவல் | பஞ்சாப் | குஜராத் |
விளையாடிய மொத்தப் போட்டி | 2 | 2 |
வெற்றி | 1 | 1 |
தோல்வி | 1 | 1 |
அதிக மதிப்பெண் | 189 | 190 |
குறைந்த மதிப்பெண் | 145 | 143 |
கடந்த போட்டிகள் விவரம்:
DATE | வெற்றி | வித்தியாச வெற்றி | இடம் |
மே 3, 2022 | பஞ்சாப் | 8 விக்கெட்டுகள் | DY பாட்டீல் ஸ்டேடியம், நவி மும்பை |
ஏப்ரல் 8, 2022 | குஜராத் | 6 விக்கெட்டுகள் | பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை |
கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி):
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -