சினிமா உலகில் பிரபலமான புஷ்பா திரைப்பட இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா-2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. 

Continues below advertisement

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

தேவி ஸ்ரீ பிரசாத் உடன், புஷ்பா-2 படத்தில் தமன் பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதேபோலவே, புஷ்பா -2 படத்தில் ஶ்ரீலீலா கேமியோ செய்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

புஷ்பா -2 ரிலீஸ் தேதி:

புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி உரிமை:

புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.

புஷ்பா படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான வர்த்தகம் மட்டும் தற்போது வரை ரூபாய் 650 கோடி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.