தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். அதேபோல, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர்கள் இருவரும் இணைந்து யாரடி நீ மோகினி படம் நடித்தனர். பின்னர், எதிர்நீச்சல் படத்தில் ஒரே ஒரு பாடலில் இருவரும் இணைந்து நடித்தனர்.


நயன்தாரா - தனுஷ் விவகாரம்:


அதன்பின்பு, இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணமாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகிறது.


இதற்காக வெளியிடப்பட்ட நயன்தாரா திருமண கிளிம்ப்ஸில் நானும் ரவுடிதான் பட கிளிப்ஸ் இடம்பெற்றிருந்தது. அந்த கிளிப்ஸ் தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறி நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தற்போது கோலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.



போஸ்டர் மூலம் தாக்குகிறாரா?


இந்த நிலையில், நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ட்ரெயிலர் இன்று வெளியாகிறது. இதற்காக நேற்று போஸ்டர் ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார். அதில் கையில் ஈட்டியுடன் ஒரு கூட்டத்தை எதிர்த்து நிற்பது போல உள்ளது.


அந்த போஸ்டர் மீது She Declares War என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, அவள் போரை அறிவிக்கிறாள் என்று அர்த்தம் ஆகும். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டிருந்த நயன்தாரா, மிருகங்கள் மீதான போர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


டீசரிலும்  காத்திருக்கா மோதல்?


தனுஷ் – நயன்தாரா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நயன்தாரா வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் மிருகங்கள் மீதான போர் என்று நயன்தாரா குறிப்பிட்டிருப்பது நடிகர் தனுஷை மறைமுகமாக தாக்குகிறார் என்று சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டில் இன்று வெளியாக உள்ளது. படத்தின் டீசரில் நிச்சயம் தனுஷை தாக்குவது போல வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகி வேடங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் அன்னபூரணி படம் வெளியானது. மேலும், அவரது கைவசம் டெஸ்ட், மன்னாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ், தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் உள்ளது.