GT vs DC Live Score: டேபிள் டாப்பர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற டெல்லி..!
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி வெற்றி
அதிரடியாக விளையாடி வந்த திவேதியா, இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்
19வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் சிக்சர் அடித்து அசத்தினார் திவேதியா
குஜராத் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை
பரபரப்பான கட்டத்தில் உள்ள போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற 12 பந்துகளில் 33 ரன்கள் தேவை
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபினவ் மனோகர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்
குஜராத் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 37 ரன்கள் அவசியம்
44 பந்துகளில் அரைசதம் விளாசினார் கேப்டன் பாண்ட்யா
பாண்ட்யா - அபினவ் கூட்டணி 50 ரன்களை சேர்த்துள்ளது.
குஜராத் அணி வெற்றி பெற 30 பந்துகளில் 52 ரன்கள் தேவை
குஜராத் வெற்றி பெற 42 பந்துகளில் 68 ரன்கள் தேவை
குஜராத் அணி 11 ஓவர்கள் முடிவில் 55 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
10.1 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 50 ரன்களை சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 49 ரன்களை சேர்த்துள்ளது
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 39 ரன்களை சேர்த்துள்ளது
அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்
பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 31 ரன்களை சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 26 ரன்களை சேர்த்துள்ளது.
இஷாந்த் சர்மா பந்துவீச்சில் விஜய் சங்கர் கிளீன் போல்டானார்.
4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 21 ரன்களை சேர்த்துள்ளது
18 ரன்களை சேர்ப்பதற்குள் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களை மட்டுமே சேர்த்தது
19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 127 ரன்களை சேர்த்துள்ளது
பொறுப்பாக ஆடி 51 ரன்களை சேர்த்த அமன் கான் அவுட்
18 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 119 ரன்களை சேர்த்துள்ளது
பொறுப்புடன் விளையாடிய அமன் கான் 41 பந்துகளில் அரைசதம் எட்டினார்
டெல்லி வீரர் அமன் கான் தனி ஒரு ஆளாக போராடி வருகிறார்
16.3 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 100 ரன்களை எட்டியது
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஷர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்களை சேர்த்துள்ளது
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 61 ரன்களை சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 54 ரன்களை சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 44 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது
8 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 40 ரன்களை சேர்த்துள்ளது
பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை சேர்த்துள்ளது
10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பிரியம் கர்க்
வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார் மணீஷ் பாண்டே
4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்களை சேர்த்துள்ளது
பவர்பிளேயின் 3வது ஓவரிலேயே வெறும் 8 ரன்களுக்கு ரோஸோ ஆட்டமிழந்தார்
2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 15 ரன்களை சேர்த்துள்ளது
டெல்லி கேப்டன் வார்னர் வெறும் 3 ரன்களுக்கு, ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தார்..
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து 5 ரன்களை சேர்த்துள்ளது.
போட்டியின் முதல் பந்திலேயே சால்ட் விக்கெட்டை இழந்தது டெல்லி அணி
டேவிட் வார்னர், பிலிப் சல்ட், ரிலே ரோஸோ, மணிஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்ஷர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, அமன் கான்
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
கலீல் அகமது, லலீத் யதவ், யாஷ் தல், பிரவீன் துபே, அபிஷேக் போரல்
ஹர்திக் பாண்டியா(கேப்டன்) , டேவிட் மில்லர் , விஜய் ஷங்கர் , ராகுல் திவாடியா , விருத்திமான் சஹா(விக்கெட் கீப்பர்) , ரஷித் கான் , அபினவ் மனோகர், முகம்மது ஷமி , ஜோஸ்வா லிட்டில் , மோகித் ஷர்மா , நூர் அகமது
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
சுப்மன் கில், சாய் கிஷோர், கே.எஸ் பரத், சாய் சுதர்ஷன், சிவம் மாவி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணிமுதலில் பேட்டிங் செய்ய முடிவு
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஐபிஎல் சீசன்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
டெல்லி - குஜராத் மோதல்:
இந்த நிலையில் 44வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
குஜராத் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில், டெல்லி அணிக்கு இனி வரும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா? நிலை தான். அந்த அணி எஞ்சிய 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் கனவை நினைத்து பார்க்க முடியும். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகள் ஜியோ சினிமா செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் ஒளிபரப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச அணி:
சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்) , டேவிட் மில்லர் , விஜய் ஷங்கர் , ராகுல் திவாடியா , விருத்திமான் சஹா(விக்கெட் கீப்பர்) , ரஷித் கான் , முகம்மது ஷமி , ஜோஸ்வா லிட்டில் , மோகித் ஷர்மா , நூர் அகமது
டெல்லி கேபிடல்ஸ் உத்தேச அணி:
டேவிட் வார்னர், பிலிப் சல்ட், மிட்செல் மார்ஷ், மணிஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்ஷர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்
ஆட்டத்தை மாற்றப்போகும் வீரர்கள் (impact players) யார்?
குஜராத் அணியில் கே.எஸ்.பாரத், சாய் சுதர்சன், சிவம் மாவி, ஜெயந்த் யாதவ் ஆகியோரும், டெல்லி அணியில் பிருத்வி ஷா, லலித் யாதவ், பிரவீன் துபே, சேத்தன் சகாரியா ஆகியோரும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்தது என்ன?
குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியிலும், நடப்பு சீசனில் டெல்லியில் நடந்த போட்டியிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. இதனால் இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்று குஜராத் அணியை பழிதீர்க்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சொந்த மைதானத்தில் களமிறங்குவது குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -