good bad ugly first single: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் ரிலீசாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


குட் பேட் அக்லி முதல் பாடல் எப்போது?


இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் பாடல் சுடச்சுட தயாராகி வருவதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 






கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் மாஸ்க்கு எல்லாம் மாஸ் என்ற பாடலை ஜிவி பிரகாஷ் உருவாக்கியிருப்பதாக அறிவித்திருந்தார். இதனால், மார்ச் 18ம் தேதி இந்த பாடலே வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஒரு சாதாரண மனிதனின் படமாக அமைந்திருந்தது. 


ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ்:


ஆனால், குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்தின் ப்ளாக்பஸ்டர் படங்களான வாலி, அமர்க்களம், தீனா, பில்லா, அட்டகாசம் ஆகிய படங்களின் ரெஃபரென்ஸ் காட்சிகள் இருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 


மேக்கிங் வீடியோ ரிலீஸ்:


மேலும், படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குட் பேட் அக்லி டீசர் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.