GT vs CSK, IPL 2023 Live: அபாரமாக ஆடி சென்னையை வீழ்த்திய குஜராத்; 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!
IPL 2023, GT vs CSK LIVE Score Updates: சென்னை சூப்பர்ர் கிங்ஸ் மற்றும் குஜரார்த் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேடுகளுக்கு ஏபிபியுட்ன இணைந்து இருங்கள்.
20வது ஓவரின் முதல் இரண்டு பந்தில் திவாட்டியா சிக்ஸர் மற்றும் பவண்டரி விளாச, குஜராத் அணி வெற்றி பெற்றது.
19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149ரன்கள் சேர்ப்பு.
16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள்.
15 ஓவர்கள் முடிவில் குஜராத் 138-4.
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்துள்ளது குஜராத். வெற்றிக்கு இன்னும் 65 ரன்கள் தேவை.
ஹர்திக் பாண்டியா 13 ஓவரினை வீசிய ஜடேஜாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிறப்பாக ரன்கள் குவிக்கும் குஜராத அணி 12 ஓவர்கள் முடிவில் 111 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில் 30 பந்தில் தனது அரைசத்தினை விளாசியுள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை குவித்துள்ளது.
இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 10வது ஓவரின் மூன்றாவது பந்தில் அவுட் ஆகியுள்ளார்.
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 82 -1.
குஜராத் அணியின் வில்லியம்சனுக்கு காயம் ஆனதால், அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை அணியில், அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக துஷர் தேஸ் பாண்டே களமிறக்கப்பட்டுள்ளார்.
4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் சேர்த்துள்ளது.
நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தினை எதிர் கொண்ட சஹா கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியுள்ளது. மூன்று ஓவர்கள் முடிவில் இந்த அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்துள்ளது சென்னை.
20வது ஓவரின் 3வது பந்தில் 85 மீட்டருக்கு ஒரு சிக்ஸரை தோனி பறக்கவிட்டுள்ளார்.
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்துள்ளது.
சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ருத்ராஜ் கெயிக்வாட் 50 பந்தில் 92 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
சிறப்பாக விளையாடி வரும் சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 151 - 4.
சிறப்பாக விளையாடி வரும் சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது.
13 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடிவந்த ராயுடு ஜோஸ்வா லிட்டில் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார்.
சிக்ஸரை தடுக்க முயன்ற வில்லியம்சன் வலது காலில் அடிபட்டதால், போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.
குஜராத் அணியின் பந்து வீச்சை சிதறடிக்கும் சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடிவரும் சென்னை 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் குவித்துள்ளது.
மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் 23 பந்தில் அரைசதம் விளாசியுள்ளார்.
இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த சென்னை அணி நிதானமாக ஆடியது, 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 72 - 3.
நிதானமாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் ரஷித் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இவரது பந்து வீச்சில் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டை இழப்பது இது மூன்றாவது முறையாகும்.
7 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 64 - 2.
6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி ரஷித் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார்.
மிகச் சிறப்பாக விளையாடிய சென்னை அணி ஐந்து ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் குவித்துள்ளது.
சிறப்பாக பந்து வீசி வந்த முகமது ஷமி ஐந்தாவது ஓவரின் 4வது பந்தை நோ-பாலாக வீசியுள்ளார். இதற்கான ஃப்ரீ-ஹிட் பந்தை மொயின் அலி சிக்ஸருக்கு பறக்கவிட்டுள்ளார்.
நான்காவது ஓவரில் சென்னை அணி சிறப்பாக விளையாடி 15 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் குவித்துள்ளது.
இந்த சீசனின் முதல் சிக்ஸரை சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் பறக்கவிட்டுள்ளார்.
சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி ஒரு ரன் மட்டும் விட்டுக் கொடுத்துள்ளார். இந்த ஓவர் முடிவில் சென்னை 14- 1.
இந்த சீசனின் முதல் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றியுள்ளார். சென்னை அணியின் கான்வேவை க்ளீன் போல்ட் ஆக்கியுள்ளார்.
ருத்ராஜ் கெய்க்வாட் இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் பறக்கவிட்டதால் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஓவரை குஜராத் அணியின் முகமது ஷமி வீசியுள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
டாஸ் போடுவதற்காக நடப்புச் சாம்பியன் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கோப்பையுடன் வந்துள்ளார்.
தொடக்க விழாவில் பங்கு பெற தல தோனி மைதானத்துக்கு வந்துள்ளார்.
ஆஸ்கார் விருது வாங்கிய நாட்டு நாட்டு பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனமாடிய போது ஒட்டு மொத்த மைதானமும் ஆடியது.
ஐபிஎல்லின் 16வது சீசனின் தொடக்க விழாவில் தமன்னா மற்றும் ராஷ்மிகா நடனமாடி அசத்தி வருகின்றனர். முதல் பாடலாக”மனசும் இப்போ தந்தி அடிக்குது” எனும் தமிழ் பாடலுக்கு தமன்னா நடனமாடி அசத்தியுள்ளார்.
மைதானம் முழுவதும் குவிந்துள்ள ரசிகர்கள் விண்ணை அதிர வைக்கும் அளவிற்கு கரகோஷத்தினை எழுப்பி வருகின்றனர்.
பாடகர் அர்ஜித் சிங் “ வந்தே மாதரம்” எனும் பாடலைப் பாடி, தொடக்கவிழாவை சிறப்பித்ததுடன், ஒட்டு மொத்த அரங்கையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.
இந்த சீசனில் முதல் முறையாக இம்பேக்ட் ப்ளேயர் எனும் விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் போட்டியின் தன்மை முற்றிலுமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீசும் அணி 20 ஓவர்களை 90 நிமிடங்களுக்குள் வீசியாக வேண்டும். தாமதமானால், அவுட் ஃபீல்டில் 4 பேரை மட்டும் தான் ஃபீல்டிங்கிற்கு நிறுத்த முடியும்.
10 அணிகள் களமிறங்கும் இந்த தொடரில் லீக் போட்டிகளுடன் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன.
கிரிக்கெட் குறித்த தோனியின் அறிவும், அனுபவமும் போட்டியின் தன்மையை மாற்றும் அவரது யுக்திகளும் தான் அவருக்கான் பெருமை என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டே அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிகவும் வலுவான அணிகளை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.
கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ளன.
2008 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டி 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இன்று 16அவது சீசன் தொடங்கவுள்ளது.
Background
GT vs CSK LIVE Score Updates:
ஐபிஎல் தொடரில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் திரைநட்சத்திரங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
16வது ஐபிஎல் தொடர்:
இன்று தொடங்க உள்ள 16வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, நான்கு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான, நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்க விழா:
தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, திரை நட்சத்திரங்களுடன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழா நடைபெறுவது, ஐபிஎல் தொடரில் வழக்கமாகும். ஆனால், கடந்த 2018ம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடைபெறவில்லை. புல்வமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2019ம் ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடக்க விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதால், அகமதாபாத்தில் இன்று கோலாகலமாக ஐபிஎல் தொடக்க விழா, மாலை 6 மணியளவில் தொடங்க உள்ளது.
கலக்கப்போகும் திரைநட்சத்திரங்கள்:
தொடக்க விழாவில் பிரபல பாடகரான அர்ஜித் சிங் பல்வேறு பாடல்களை பாடி அசத்த உள்ளார். அதோடு, ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா பாட்டியா ஆகிய நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃபும் நடனமாடுவார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்க விழாவில் பிசிசிஐ நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில், வருண் தவான், பிரபுதேவா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஹிருத்திக் ரோஷன், தமன்னா பாட்டியா மற்றும் மிகா சிங் என பலரது கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னை - குஜராத் மோதல்:
கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற உள்ள நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே இந்த அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரண்டிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. அதோடு, இந்த தொடர் தோனியின் கடைசி தொடர் என கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே பெற்ற தோல்விகளுக்கு பழிவாங்குவதோடு, நடப்பு தொடரை வெற்றியோடு தொடங்கவும் சென்னை அணி முனைப்பு காட்டி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -