Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!

Kilambakkam to Mahindra City Flyover: கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வரை 6 வழி மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது.

Continues below advertisement

Kilambakkam to Mahindra City 6 Lane Flyover: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சாலை வசதிகள், முக்கிய பங்காற்றி வருகின்றனர். சாலை வசதிகள் மேம்படும்போது, அப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒரு மாநிலம் உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கு, ஏற்றுமதி செய்வதற்கும் சாலை வசதிகள் இன்றி அமையாது ஒன்றாக உள்ளது. 

Continues below advertisement

எனவே சாலையின் முக்கியத்துவம் அறிந்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய சாலைகள் மற்றும் பல்வேறு சாலை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் புதிதாக 25 புதிய சாலைகள் அமைக்கும் பணி சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், துவங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 6600 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட உள்ளன. 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (Chennai Trichy Highway)

தென்மாவட்டம் மற்றும் சென்னையை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் இந்த சாலையில் சுமார் 1.3 லட்சம் வாகனங்கள் பயணித்து வருகின்றன. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், இந்த சாலையில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் தினமும் இந்த சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. ஏற்கனவே, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam Bus Stand 

போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கிளாம்பாக்கம் பகுதியில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஆரம்ப கால சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு பயனுள்ளதாக மாறி வருகிறது.

தொடர்ந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதிய ஆறு வழி மேம்பாலச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

கிளாம்பாக்கம் - மகேந்திரா சிட்டி 6 வழி மேம்பாலச்சாலை - Kilambakkam to mahindra city Flyover

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால், பேருந்து நிலையம் அருகே சிறிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.‌ திருச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்வதற்காக, கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே உள்ள மகேந்திரா சிட்டி வரை 6 வழி மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து மகேந்திரா செட்டிங் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த 18 கிலோமீட்டர் தூரத்திற்கு, 6 வழி மேம்பாலச்சாலை சுமார் 2950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. 

பயணம் நேரம் குறையும் 

இந்த ஆறு வழி மேம்பாலச்சாலை அமைக்கப்பட்டால் சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 15 நிமிடத்தில் சென்றுவிடலாம். தற்போது இந்த இடத்தை கடந்து செல்ல, 30 முதல் 45 நிமிடங்கள் வரை செலவாகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்போது 2 முதல் 3 மணி நேரம் வரை நேரம் எடுத்துக் கொள்கிறேன். 

இந்த 6 வழி மேம்பாலச்சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, 10 முதல் 15 நிமிடத்தில் இந்த இரண்டு நடந்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் சென்னையிலிருந்து தென்மாவட்டத்திற்கு, தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

Continues below advertisement
Sponsored Links by Taboola