சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 


சாம்பியன்ஸ் டிராபி 2025: 


உலகின் டாப் 10 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும்  ஐக்கிய அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில் நடைப்பெற உள்ளது. இதற்கான அணிகளை வருகிற 12 ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்க வேண்டும் என்றும் அணியில் மாற்றங்கள் தேவைப்பட்டால் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளது. 


தொடக்க ஆட்டக்காரர் யார்? 


இந்த தொடரில் கேப்டனான ரோஹித் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, மேலும் ஷுப்மான் கில் அவருடன் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரராக ஆடலாம் என்று கூறப்படுகிறது


ரோஹித்-கில் தொடக்க ஜோடி இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறது. இருவரின்  இன்னிங்சை கட்டமைத்து சொல்லும் விதம் ம் அவர்களை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான தொடக்க ஜோடிக்கான முன்னணி தேர்வாக உள்ளது.


ஆனால் கடந்த சில காலமாக சுப்மன் கில்லின் ஃபார்ம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை, ஆஸ்திரேலிய தொடரில் அவர் ஆடிய விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


இதையும் படிங்க: Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபிக்கு புதிய கேப்டன்? ரோகித் vs பாண்டியா.. உத்தேச அணி இது தான்!


கில்லுக்கு பதில் யார்? 


ஒரு வேளை கில் இல்லை என்றால் அவருக்கு பதிலாக யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் ரிசர்வ் வீரராக இருப்பார். ஜெய்ஸ்வால் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடந்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஜெய்ஸ்வால் இருந்தார். அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. 


ஆனால் தற்போதைய ஃபார்ம் ஆகியவற்றை வைத்து பார்த்தால் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறங்கினால் அது இந்திய அணிக்கு வலு சேர்க்கும் . 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான இந்தியாவின் சாத்தியமான அணி:


தொடக்க ஆட்டக்காரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால்


மிடில் ஆர்டர்: விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்


ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்


ஸ்பின்னர்கள்: நிதிஷ் ரெட்டி / அக்சர் படேல்


வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்


இந்திய அணி அறிவிப்பு எப்போது? 


சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி ஜனவரி 12, 2025 என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்திய அணி ஒரு நாள் முன்னதாக ஜனவரி 11 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.