DC vs KKR,IPL2022 Live: வார்னர்-பவல் அசத்தல்.. கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி...!
DC vs KKR,IPL2022 Live: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
16 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்களின் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
7 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
4 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியின் வீரர் மிட்சல் மார்ஷ் விக்கெட்டை ஹர்ஷித் ரானா எடுத்துள்ளார்.
டெல்லி அணியின் பந்துவீச்சில் கடைசி ஓவரை வீசிய முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 2 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
13 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணியின் ஆரோன் ஃபிஞ்ச் விக்கெட்டை டெல்லி அணியின் சேத்தன் சர்காரியா எடுத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியில் தமிழக வீரர் பாபா இந்தர்ஜீத் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்புத் தொடரில் டெல்லி அணி ஏற்கெனவே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட வீரர்கள்.. இன்று புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் டெல்லி...
ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கொல்கத்தா அணி 8ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது.
Background
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பை வான்கடேவில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் இந்த தொடரின் தொடக்கத்தில் வலுவாக இருந்தாலும் கடைசியாக ஆடிய போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வியை சந்தித்து வருகின்றன.
டெல்லி அணி இளம் அணியாக இருந்தாலும் கடந்த சில போட்டிகளில் அவர்களது திறமை முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை என்றே கூற வேண்டும். டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்விஷா மற்றும் டேவிட் வார்னர் அதிரடி தொடக்கத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். சர்பாஸ் கான் ஒன்டவுனில் அதிரடியாக ஆடினால் அந்த அணிக்கு கூடுதல் பலம் ஆகும். டெல்லி அணிக்கு அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த போட்டியில் அதிரடியை காட்டினால் நிச்சயம் நெருக்கடி ஏற்படும்.
ஆல்ரவுண்டர்களான லலித்யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரோவ்மென் பாவெல் இந்த போட்டியிலும் அதிரடி காட்டினால் நிச்சயம் டெல்லி மிகப்பெரிய ஸ்கோர் எட்டும். சுழலில் குல்தீப் யாதவ் அசத்தினால் டெல்லிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் ஆரோன் பிஞ்சுடன் வெங்கடேஷ் அய்யர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொல்கத்தா அணிக்கு அளிக்க வேண்டியது அவசியம். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தனது அதிரடியை இந்த ஆட்டத்தில் தொடர வேண்டியது அவசியம். நிதிஷ் ராணா, ரிங்கு சிங்கும் அதிரடியாக ஆடினால் கொல்கத்தா அணிக்கு ரன் எகிறும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -