CSK vs KKR LIVE Score: சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய கொல்கத்தா..!

CSK vs KKR IPL 2023 LIVE Score: சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 14 May 2023 11:14 PM
CSK vs KKR LIVE Score: கொல்கத்தா வெற்றி..!

கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

CSK vs KKR LIVE Score: ரிங்கு சிங் ரன் அவுட்..!

18வது ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் தனது விக்கெட்டை ரன் - அவுட் முறையில் இழந்து வெளியேறியுள்ளார். 

CSK vs KKR LIVE Score: ராணா அரைசதம்..!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்த கொல்கத்தா அணியை கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ராணா 38 பந்தில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். 

CSK vs KKR LIVE Score: ரிங்கு சிங் அரைசதம்..!

நெருக்கடியான சூழலில் களமிறங்கி பொறுப்புடனும் அட்டகாசமாகவும் ஆடிய ரிங்கு சிங் 39 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

CSK vs KKR LIVE Score: 15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா..!

15 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: 100 ரன்களைக் கடந்த கொல்கத்தா..!

13.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 105 ரன்களை எட்டியுள்ளது. 

CSK vs KKR LIVE Score: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: அட்டகாசமான பார்ட்னர்ஷிப்..!

ராணா மற்றும் ரிங்கு சிங் கூட்டணி இக்கட்டான சூழலில் இருந்து கொல்கத்தா அணியை மீட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இதுவரை அதாவது 13வது ஓவர் வரை 51 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் சேர்த்துள்ளனர். 

CSK vs KKR LIVE Score: 12 ஓவர்களில் கொல்கத்தா..!

12 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: கேட்ச் மிஸ்..!

11 வது ஓவரின் 2வது பந்தில் ராணா கொடுத்த கடினமான கேட்ச்சினை பத்திரனா மிஸ் செய்துள்ளார். 

CSK vs KKR LIVE Score: பாதி ஆட்டத்தில் கொல்கத்தா..!

10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 67 ரனக்ள் சேர்த்துள்ளனர். 

CSK vs KKR LIVE Score: அடுத்தடுத்து பவுண்டரி..!

9வது ஓவரில் ரிங்கு சிங் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசியுள்ளார். 

CSK vs KKR LIVE Score: இலக்கை துரத்தும் கொல்கத்தா..!

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலககுடன் ஆடி வரும் கொல்கத்தா அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது

CSK vs KKR LIVE Score: 100 ரன்களை எட்டிய சென்னை..!

சென்னை அணி 16.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியது. 

CSK vs KKR LIVE Score: 15 ஓவர்களில் சென்னை..!

கடந்த நான்கு ஓவர்களாக விக்கெட் எதையும் இழக்காமல் உள்ள சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: மொயின் அலியும் அவுட்..!

11வது ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

CSK vs KKR LIVE Score: நான்காவது விக்கெட்டை இழந்த சென்னை.!

10. 1 ஓவரில் சென்னை அணியின் அம்பத்தி ராயுடு சுனில் நரேன் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். 

CSK vs KKR LIVE Score: 10 ஓவர்களில் சென்னை..!

10 ஓவர்களில் சென்னை அணி மூன்று விக்கெட்டை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: மூன்றாவது விக்கெட்டை இழந்த சென்னை..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வந்த கான்வே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

CSK vs KKR LIVE Score: 9 ஓவர்கள் முடிவில்..!

9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: ரஹானே அவுட்.!

8வது ஓவரின் இறுதிப் பந்தில் ரஹானே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் எடுத்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: பவர்ப்ளே முடிவில்..!

பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: 50 ரன்களை எட்டிய சென்னை..!

5.1 ஓவர்களில் சென்னை அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: 5 ஓவர்கள் முடிவில்..!

5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டை இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: முதல் விக்கெட்..!

சிறப்பாக ஆடி வந்த ருத்ராஜ் கெய்க்வாட் வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

CSK vs KKR LIVE Score: பவர்ப்ளே பாதி முடிந்தது..!

மூன்று ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிவில் சென்னை..!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் நிதானமாக பேட்டிங்கை தொடங்கியுள்ள சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்துள்ளது. 

CSK vs KKR LIVE Score: டாஸ்..!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

Background

16வது ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா இடையேயான ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, புள்ளி  விவரங்கள் சொல்வது என்ன என்பது பற்றி காணலாம். 


சென்னை - கொல்கத்தா:


நடப்பு ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,  டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பி பிரிவில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருந்தது. 


இதுவரை இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது மாலை 3.30 மணிக்கு நடக்கும் 60வது போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடக்கும் 61வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றது. 


நடப்பு தொடர் நிலவரம் 


இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி  7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் கிட்டதட்ட பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளார்.  அதேசமயம் கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.


சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்திய நிலையில், அந்த வெற்றியை தக்க வைக்க இன்றைய ஆட்டத்தில் முயலும்.  அதேசமயம் கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் தோற்றது. இதனால் அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வரலாறு சொல்வது என்ன? 


ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்த சீசனில் ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் கொல்கத்தா அணி விளையாடும் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மைதானத்தின் நிலவரம்


சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் சென்னை மைதானம் சென்னை அணிக்கு எப்போதும் ராசியானதாகும். இந்த சீசனில் இதுவரை சென்னை அணி இம்மைதானத்தில் 6 முறை விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டத்தில் தோற்றுள்ளது. லீக் போட்டியில் இந்த ஆட்டம் சென்னை அணிக்கு கடைசி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் கிடைக்கும்? 


சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா


கொல்கத்தா அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.